[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்
  • BREAKING-NEWS “கல்வியை பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது...”சூர்யா கொடுத்த பதிலடி
  • BREAKING-NEWS “மோடி அரசு சூட்கேஸ் தூக்கும் அரசு இல்லை” - நிர்மலா சீதாராமன்

மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க கமலுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டதா?

who-created-the-rumour-that-kamalhasan-was-invited-asks-bjp

மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை பாஜக மறுத்துள்ளது.

மக்களவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 352 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கிறது. மோடி இரண்டாவது முறையாக பிரதமர் பதவி ஏற்கிறார். இந்த பதவியேற்பு விழா  நாளை மாலை 7 மணிக்கு ராஷ்ட்ரபதி பவனில் நடக்கிறது. இதில் நம் நாட்டு அரசியல் கட்சி தலைவர்களுடன் சில வெளிநாட்டு தலைவர்களும் கலந்து கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள, நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ரஜினியும், விழாவில் கலந்துகொள்வதாக தெரிவித்துள்ளார். அதே போல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் கமல் ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை பாஜக மறுத்துள்ளது.

பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் ட்விட்டர் பதிவில், கமல் ஹாசனுக்கு அழைப்பு விடுத்ததாக செய்தியை பரப்பியது யார் என கேள்வி எழுப்பியுள்ளார். 

அதேவேளையில் குடியரசுத்தலைவர் மாளிகையில் இருந்து தொலைபேசி வாயிலாக  கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close