[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேரள அரசு வழங்கும் நீரை தமிழக அரசு ஏற்க மறுத்ததாக வந்த தகவலில் உண்மையில்லை - அமைச்சர் வேலுமணி
  • BREAKING-NEWS தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மாமூல் வசூல், லஞ்சம் வாங்கும் போலீசார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உள்துறை செயலர், டிஜிபி 4 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
  • BREAKING-NEWS வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக திமுக அறிவித்துள்ள போராட்டம் ஒரு கபட நாடகம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS ஜூன் 24ம் தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத்தில் இருந்து 53 உறுப்பினர்களை நீக்கிய நடைமுறை சரியே - சென்னை உயர்நீதிமன்றம்

டெல்லி: சிறுபான்மையினர் வசிக்கும் பகுதிகளில் காங்கிரசுக்கே அதிக வாக்குப்பதிவு

congress-gets-more-votes-than-bjp-aap-in-minority-pockets-in-delhi

டெல்லியில் சிறு‌பான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கே அதிகளவு வாக்குகள் பதிவாகியுள்ளது தேர்தல் ஆணையத்தின் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. 

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிந்து  பாஜக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த வெற்றியின் மூலம் இக்கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.  ஹரியானா, உத்திரப்பிரதேசம், குஜராத், டெல்லி, மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜக முழு வெற்றியை பெற்றுள்ளது. மொத்தமாக பாஜக தலைமையிலான கூட்டணி 49% வாக்குகளை தன்வசப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் சிறு‌பான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கே அதிகளவு வாக்குகள் பதிவாகியுள்ளது தேர்தல் ஆணையத்தின் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. 

மக்களவைக்கான 3 தொகுதிகளில் சிறுபான்மையினர்‌ அதிகம் வாழும் சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளை விட காங்கிரஸ் கட்சி அதிக வாக்குகள் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. கிழக்கு டெல்லியின் சிறுபான்மையினரின் ஆதிக்கம் அதிகம் உள்ள ஓக்லா சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அரவிந்தர் சிங், 60 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருக்கிறார். 

அதேநேரம், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் 43 ஆயிரம் வாக்குகளையும், பாஜகவின் நட்சத்திர வேட்பாளர் கவுதம் கம்பீர் 35 ஆயிரம் வாக்குகளையுமே பெற்றிருக்கின்றனர். இதேபோன்று, சிறுபான்மையினர் அதிகம் வாழும் மற்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் வேட்பாளர்களே அதிக வாக்கு பெற்றிருக்கின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close