[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் - உதயநிதி ஸ்டாலின்
  • BREAKING-NEWS சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம்
  • BREAKING-NEWS தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்

வீழ்ந்தது பிரியங்கா காந்தியின் வியூகம்  - உத்தரப் பிரதேசத்தில் பாஜக முன்னிலை

priyanka-gandhi-fails-to-make-impact-in-up

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலையில் உள்ளது.  

உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் ராஷ்டிரீயா லோக் தளம் ‘மகா கட்பந்தன்’ என்ற மிகப் பெரிய கூட்டனியை அமைத்திருந்தது. அதன்படி சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலா 38 இடங்களிலும் ராஷ்டிரீய லோக் தளம் 2 தொகுதிகளிலும் போட்டியிட்டனர். அமேதி மற்றும் ரேபரேலி தொகுதியில் இவர்கள் வேட்பாளர்கள் யாரையும் நிறுத்தவில்லை. அதேபோல காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 71 இடங்களில் மட்டுமே வேட்பாளர்களை களமிறக்கியது.

அத்துடன் இந்தத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர். அதேபோல காங்கிரஸ் கட்சியும் உத்தரப் பிரதேச கிழக்கு பகுதி பொறுப்பாளராக பிரியங்கா காந்தியை நியமித்து கடுமையான பிரச்சாரத்தை முன்வைத்தது. உத்தரப் பிரதேசத்தில் பிரியங்கா காந்தி 33 பொதுகூட்டத்தில் உரையாற்றினார். 

மேலும் பிரியங்கா காந்தி, “இம்முறை காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பாஜகவின் வாக்குகளை பிரிப்பார்கள். ஏனென்றால் எந்தத் தொகுதியில் எல்லாம் எங்கள் வேட்பாளர்கள் பலமாக இருக்கிறார்களோ அங்கு அவர்கள் வெற்றி பெறுவார்கள். மற்ற இடங்களில் எங்கள் வேட்பாளர்கள் பாஜகவிற்கு வரும் வாக்குகளை பிரிப்பார்கள். இதனால் பாஜக இம்முறை உத்தரப் பிரதேசத்தில் அதிக இடங்களில் தோல்வியைத் தழுவும்” எனத் தெரிவித்தார்.

ஆனால் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தற்போதைய நிலவரப்படி பாஜக 60க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது. சமாஜ்வாதி கூட்டணி 17 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளது. இதை வைத்து பார்க்கும் போது ‘மகா கட்பந்தன்’ கூட்டணி மற்றும் பிரியங்கா காந்தி வகுத்த வியூகம் ஆகிய எதுவும் எடுபடவில்லை என்பது தெரியவந்துள்ளது. 

கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் பாஜக 71 இடங்களும், காங்கிரஸ் 2 இடங்களும், சமாஜ்வாதி கட்சி 5 இடங்களும், அப்னா தளம் கட்சி 2 இடங்களும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close