[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக மாவட்டந்தோறும் ஜூன் 22 முதல் திமுக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS வாகன ஓட்டு‌நர் உ‌ரிமம் பெறுவதற்கான குறைந்த‌பட்ச கல்வி தகுதியை அடியோடு நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு ‌செய்துள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆந்திர போலீஸாருக்கு இன்று முதல் வார விடுமுறை அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
  • BREAKING-NEWS மக்களவை சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஓம் பிர்லா எம்.பி. போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
  • BREAKING-NEWS தேர்தல் தோல்வியை அடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்கிரஸ் கட்சி

“மோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்” - பாக். பிரதமர் இம்ரான் கான் 

i-congratulate-prime-minister-modi-on-the-electoral-victory-of-bjp-and-allies-says-imran-khan

பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி தொடங்கி கடந்த 19- ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. அத்துடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடந்துள்ளது.

கிட்டத்தட்ட முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில் பாஜக 340க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும் சூழ்நிலை எழுந்துள்ளது. இந்நிலையில் மோடிக்கு உலக நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மோடிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தெற்கு ஆசியாவின் அமைதி, வளர்ச்சி மற்றும் வளத்திற்காக, பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கி இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்

இந்தியத் தேர்தல் குறித்து முன்னதாக பேசிய இம்ரான்கான், மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பாக அமையுமென தெரிவித்திருந்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close