[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வாகன ஓட்டு‌நர் உ‌ரிமம் பெறுவதற்கான குறைந்த‌பட்ச கல்வி தகுதியை அடியோடு நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு ‌செய்துள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆந்திர போலீஸாருக்கு இன்று முதல் வார விடுமுறை அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
  • BREAKING-NEWS மக்களவை சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஓம் பிர்லா எம்.பி. போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
  • BREAKING-NEWS தேர்தல் தோல்வியை அடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்கிரஸ் கட்சி

30 ஆம் தேதி பதவி ஏற்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி!

jaganmohan-reddy-to-take-oath-as-ap-cm-on-may-30

ஆந்திராவில் வரும் 30 ஆம் தேதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவி ஏற்கிறார் என்று அந்தக் கட்சியின் மூத்த தலைவர் உமாரெட்டி வெங்கடேஸ்வரலு தெரிவித்துள்ளார். 

மக்களவைத் தேர்தலுக்கு கடந்த ஏப்ரல் 11- ஆம் தேதி தொடங்கி கடந்த 19- ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர, 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. அத்துடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடந்துள்ளது.

 ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 175 இடங்களில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 149 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆளும் தெலுங்கு தேசம் கட்சி வெறும் 25 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி ஒரு தொகுதியில் முன்னிலைப் பெற்றுள்ளது. 

இதற்கிடையே, வரும் 30 ஆம் தேதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவி ஏற்கிறார் என்று அந்தக் கட்சியின் மூத்த தலைவர் உமாரெட்டி வெங்கடேஸ்வரலு தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close