[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

விவிபாட் வந்த வரலாறு என்ன? நாளைய வாக்கு எண்ணிக்கையில் முக்கிய பங்காற்றுமா? 

all-you-wanted-to-know-about-vvpat

நாடே எதிர்பார்க்கும் மக்களவை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ளன. நாளை காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முடிவுகளை சொல்லத்தொடங்கும். இவிஎம்களில் மீது சொல்லப்பட்ட தொடர் குற்றச்சாட்டு காரணமாக விவிபாட் எனப்படும் ஒப்புகைச்சீட்டு முறை கொண்டு வரப்பட்டது. 

நாளைய வாக்கு எண்ணிக்கையில் ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கையைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு சட்டப்பேரவைக்கும் 5 வாக்குச் சாவடிகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும். வாக்கு இயந்திரங்களின் எண், நாடாளுமன்ற சட்டப்பேரவை தொகுதியின் பெயர் மற்றும் எண், வாக்குப்பதிவு நடைபெற்ற நாள், வாக்குச்சாவடி மைய எண் ஆகிய விவரங்கள் அஞ்சல் அட்டை அளவிலான வெள்ளை நிற அட்டையில் அச்சிடப்பட்டு, ஒரு பெட்டியில் போடப்பட்டு குலுக்கல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவிஎம்களின் நம்பிக்கையை உறுதிசெய்யும் விவிபாட்டின் வரலாறு என்ன?

வாக்குசீட்டு முறையில் தேர்தல் நடைபெற்ற நிலையில் 1998ம் ஆண்டு சில தொகுதிகளில் இவிஎம் பயன்படுத்தப்பட்டன. பின்னர் 2004ம் ஆண்டு இந்தியா முழுவதும், அனைத்து தேர்தல்களிலும் இவிஎம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இவிஎம்மில் முறைகேடு செய்ய வாய்ப்புள்ளதாக பல கட்சிகள் குற்றஞ்சாட்டின. ஆனால் இந்தியா போன்ற பெரிய நாடுகளுக்கு வாக்கு சீட்டு என்பது மிகவும் கடினமான வேலையாக இருக்கும் என்பதால் இவிஎம்மை தவிர்க்க முடியாது என கூறப்பட்டது. அப்படியானால் இவிஎம் நம்பிக்கையை உறுதி செய்யும் விதமாக விவிபாட் எனப்படும் ஒப்புகைச்சீட்டு முறை  கொண்டுவர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம் விவிபாட் தயாரிக்க முடிவு செய்தது. 2011ம் ஆண்டு பெல் மற்றும் இசிஐஎல் நிறுவனங்கள் விவிபாட்டை தயாரித்து செயல்விளக்கம் கொடுத்தன. அதே ஆண்டில் சில தொகுதிகளில் விவிபாட் சோதனை செய்யப்பட்டது. 

விவிபாட்டின் நடைமுறைக்கு ஏற்ப 2013ம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு நாகலாந்தின் நோக்சென் தொகுதியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முதன் முதலாக விவிபாட் பயன்படுத்தப்பட்டது. பின்னர் 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களைவைத் தேர்தலில் 8 தொகுதிகளில் மட்டும் விவிபாட் பயன்படுத்தப்பட்டன. 2017ம் ஆண்டு கோவா சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் விவிபாட் பொருத்தப்பட்டது. இப்போது நடைபெற்ற 2019 மக்களைவைத் தேர்தலிலும் அனைத்து தொகுதிகளிலும் விவிபாட் பொருத்தப்பட்டுள்ளன. 

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பதிவாகியுள்ள விவிபாட் வாக்குகளை எண்ண வேண்டுமென்று சில கட்சிகள் கோரிக்கை விடுத்தது. ஆனால் அது நடைமுறை சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. ஆனால் ஒவ்வொரு சட்டப்பேரவைக்கும் 5 வாக்குச் சாவடிகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் ஒப்புகைச் சீட்டு எண்ணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை இந்தியா முழுவதும் நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையில் விவிபாட் முக்கிய பொறுப்பு வகிக்கபோகிறது. பலரின் வெற்றி தோல்விகளை விவிபாட் தான் கடைசியில் தீர்மானிக்க போவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close