[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு
  • BREAKING-NEWS மருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்
  • BREAKING-NEWS அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்

மேற்கு வங்கம்: ஒரு வாக்குச்சாவடியில் நாளை மறுவாக்குப் பதிவு

west-bengal-re-poll-to-be-held-on-22nd-may-at-uttar-constituency

மேற்கு வங்கத்தில், ஒரு வாக்குச்சாவடியில் நாளை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டமாக நடந்து நிறைவு பெற்றுள்ளது. 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகளை நாடு எதிர்பார்த்து  காத்திருக்கிறது. இந்நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில், பாஜக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்க்கட்சிகள் நிராகரித்துள்ளன.

இதற்கிடையே மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த வாக்குப் பதிவின்போது, சில பகுதிகளில் வன்முறை நடந்தது என்றும் அந்த தொகுதிகளில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என்றும் பாஜக கோரிக்கை வைத்திருந்தது.

இதையடுத்து, மேற்கு வங்க மாநிலம் உத்தர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 200-வது எண் வாக்குச்சாவடியில், நாளை (22 ஆம் தேதி) மறுவாக்குப் பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை இந்த வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close