[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

தேர்தலை இவ்வளவு நாட்களாக நடத்தக் கூடாது: நிதிஷ் குமார்

bihar-cm-nitish-kumar-said-there-should-not-be-a-huge-gap-between-two-phase

தேர்தலை இவ்வளவு நீண்ட நாட்களாக நடத்தக் கூடாது என்று பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் 59 மக்களவைத் தொகுதிகளில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பீகாரில் 8, ஜார்கண்டில் 3, பஞ்சாப்பில் 13, மேற்கு வங்காளத்தில் 9, இமாசலபிரதேசத்தில் 4, மத்திய பிரதேசத்தில் 8, உத்தரபிரதேசத்தில் 13, சண்டிகரில் ஒன்று என 59 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடக்கிறது. பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், பாட்னாவில் உள்ள ராஜ்பவன் பள்ளியில் அமைக்கப் பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தார். 

பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’இந்த தேசம் பெரியதுதான் என்றாலும் விரைவில் தேர்தலை முடிக்க வேண்டும். ஒவ்வொரு கட்டத் தேர்தலுக்குமான இடைவெளி அதிகமாக இருக்கிறது. இந்த கோடையில் வாக்காளர்கள் உட்பட அனைவருக்கும் இது, தொல்லை கொடுக்கக் கூடியது. தேர்தல் விரைவில் முடிக்கப்பட வேண்டும். அதை இவ்வளவு நீண்ட நாட்களாக நடத்தக் கூடாது. இதுதொடர்பாக அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் எழுத இருக்கிறேன்’’ என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close