[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக திமுக அறிவித்துள்ள போராட்டம் ஒரு கபட நாடகம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS ஜூன் 24ம் தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத்தில் இருந்து 53 உறுப்பினர்களை நீக்கிய நடைமுறை சரியே - சென்னை உயர்நீதிமன்றம்

மக்களவை தேர்தல்: தொடங்கியது இறுதிக்கட்ட வாக்குப்பதிவு

seventh-phase-polling-started-for-final-round-round-of-loksabha-elections

17 வது மக்களவைக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 17 வது மக்களவையைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கிய தேர்தலில், இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இதில் 483 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இறுதிக்கட்டமான 7 வது கட்டத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இறுதிக்கட்ட வாக்குப்பதிவை தொடர்ந்து வரும் 23-ஆம் தே‌தி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. உத்தரப்பிரதேசம்,மேற்குவங்கம்,பஞ்சாப், பீகார், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

பஞ்சாப், உத்தரப்பிரதேசத்தில் தலா 13 தொகுதிகள், மேற்குவங்கத்தில் 9 தொகுதிகள், பீகாரில் 8 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தின் 8 தொகுதிகள், இமாசலப்பிரதேசத்தின் 4 தொகுதிகள், ஜார்க்கண்டில் 3 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சண்டிகரில் ஒரு மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த 59 தொகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட 918 வேட்பாளர்கள் இறுதிக்கட்டத் தேர்தல் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close