[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக திமுக அறிவித்துள்ள போராட்டம் ஒரு கபட நாடகம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS ஜூன் 24ம் தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத்தில் இருந்து 53 உறுப்பினர்களை நீக்கிய நடைமுறை சரியே - சென்னை உயர்நீதிமன்றம்

45 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கம்: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு 

madras-hc-order-to-election-commission-is-answer-for-removal-of-45-thousand-voters-in-kanyakumari

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் 45 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது தொடர்பான வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் அதிகம் வாழும் தூத்தூர், சின்னத்துறை, கடியப்பட்டினம், ராஜாக்கமங்கலம், மணவாளக்குறிச்சி, இடலாக்குடி உள்ளிட்ட கடலோர கிராமங்களில் 45 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ் மீனவர் கூட்டமைப்பு  கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

Image result for கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி

அவர் மனுவில், ஓக்கி புயல் தாக்கியபோது கன்னியாகுமரி மக்களை அரசு கண்டு கொள்ளாமல் இருந்ததை மனதில் கொண்டு வாக்காளர்கள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டார்கள் என்ற அடிப்படையிலும், அச்சம் காரணமாகவும்தான் வாக்காளர் பட்டியலில் இருந்து அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கலாம் எனக் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

எனவே அதிகளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்ட பகுதிகளில் மறுதேர்தல் நடத்த உத்தரவிட வேண்டுமெனவும், கன்னியாகுமரி தொகுதி வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், வாக்காளர் நீக்கம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

Related image

இந்த மனு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, 2016ஆம்.ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு பின், ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி நடந்து வந்துள்ளதாகவும், அப்போதே பெயர் இடம் பெற்றிருக்கிறதா என சரிபார்த்திருக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதன் பின்னர் வழக்கு குறித்து தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close