[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

“ஒரு பொய்யை நூறு முறை சொன்னால் அது உண்மையாகாது”- மோடி ஆட்சி குறித்து மன்மோகன் சிங் 

most-traumatic-and-devastating-manmohan-singh-on-pm-modi-s-5-yr-rule

மோடியின் 5 ஆண்டு கால ஆட்சி மிகவும் அதிர்ச்சிகரமானதும், பேரழிவாகவும் இருந்ததாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத் தேர்தல் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதையடுத்து முக்கிய தலைவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிடிஐ நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் மோடியின் ஆட்சி குறித்தும் நாட்டில் நிலவும் பொருளாதார சூழல் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார். அத்துடன் இந்திய பொருளாதாரத்தின் வருங்கால நிலையையும் கணித்துள்ளார். 

இந்தப் பேட்டியில், “மோடியின் ஐந்தாண்டு கால ஆட்சி மிகவும் அதிர்ச்சிகரமானதாகவும் நாட்டிற்கு பேரழிவாகவும் அமைந்தது. மோடியின் ஆட்சியில் இளைஞர்கள், விவசாயிகள், வணிகர்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் ஆகிய அனைவரும் பேரழிவை சந்தித்தனர். அத்துடன் பாஜக அரசு அனைத்து மக்களையும்  உள்ளடக்கிய வளர்ச்சிக்கு பாடுபடவில்லை. கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியா மிகப்பெரிய பிரச்னைகளைச் சந்தித்துள்ளது. அதிலும் குறிப்பாக பணமதிப்பிழப்பு நடவடிக்கை மோடி அரசின் மிகப் பெரிய ஊழலாகும். 

மேலும் நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் சரியான ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைகளை கையாளாததுதான். மத்திய நிதி அமைச்சகம் கடந்த மாதம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டின் மொத்த உற்பத்தி 6.5 சதவிகிதமாக இருக்கும் எனக் கணித்துள்ளது. அத்துடன் நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையை நோக்கி செல்லும் என்று அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் மோடி அரசு சரியாக செயல்படவில்லை. ஏனென்றால் கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக ஜம்மு-காஷ்மீரில் மட்டும் பயங்கரவாத தாக்குதல்கள் 176 சதவிகிதம் அதிகரித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக, மோடி ஒரு பொய்யை நூறு முறை சொன்னால் உண்மையாகாது. மேலும் நாட்டின் 130 கோடி மக்களின் குறைகளை மோடி என்ற ஒரு நபர் தீர்ப்பார் என்பது முடியாத காரியம். தற்போது நாட்டில் மோடி அலை என்ற ஒன்று வீசவே இல்லை. எனவே கூடிய விரைவில் பாஜக ஆட்சி முடிவுக்கு வரும்” எனத் தெரிவித்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close