[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

“மதுரையில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தது உண்மை” - தேர்தல் ஆணையம்

the-election-commission-said-in-court-that-it-was-true-that-there-were-some-security-flaws-in-the-madurai-lok-sabha-constituency

மதுரை மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் சில பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தது உண்மைதான் எனத் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

மதுரை வாக்கு எண்ணும் மையத்தில் வட்டாட்சியர் சம்பூர்ணம் உள்ளிட்டோர் நுழைந்தது தொடர்பாக சிறப்பு புலானாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரியும் சிபிஎம்  வேட்பாளர் வெங்கடேசன் வழக்கு தொடர்ந்திருந்தார். குறிப்பாக மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேர்தல் தொடர்பான ஆவணங்கள் வைத்திருந்த அறைக்குள் நுழைந்திருக்கிறார்கள். ஆவணங்களை எடுத்து சென்றது தேர்தல் விதிகளை மீறிய செயலாகும். தாசில்தார் யாருடைய உத்தரவின் பேரில் விளக்கத்தை அளிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார். 

அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜராகியிருந்த நிரஞ்சன், ஆட்சியரின் உதவியாளர் அறிவுறுத்தலின் பேரில் வட்டாட்சியர் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்றார் எனவும் அங்கிருந்து எந்த ஆவணங்களையும் எடுத்து செல்லவில்லை எனவும் குறிப்பிட்டார். 

மேலும், இதுதொடர்பாக சம்பூர்ணம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் உதவியாளர் யாருடையை அறிவுறுத்தலின் பேரில் இந்த உத்தரவை பிறப்பித்தார் என விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். 

மதுரை மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் சில பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தது உண்மைதான் எனவும் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணைய வழக்கறிஞர் பதிவு செய்திருக்கிறார். 

தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க முடிந்த தேர்தல் ஆணையத்திற்கு, மாவட்ட ஆட்சியர் மீதோ அல்லது அவரது உதவியாளர் மீதோ நடவடிக்கை எடுக்க முடியாதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

தலைமை தேர்தல் அதிகாரி ஒரு போஸ்ட் மேன் மாதிரிதான் செயல்பட்டுள்ளார் எனவும் தலைமை தேர்தல் அதிகாரியால் யார் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், எல்லா அரசு அதிகாரிகளும் தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார்கள் எனவும் ஆணையம் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் இருக்கும்போது அதிகாரம் இல்லை என எப்படி கூறுவீர்கள் எனவும் கேள்வி எழுப்பினர். 

மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்ட நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மதுரை ஆட்சியரின் உதவியாளர் மீது என்ன நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். வட்டாட்சியர்கள் எது செய்தாலும் தலைமை தேர்தல் அதிகாரி கண்டுகொள்ளாமல் இருந்து விடுவாரா எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

தலைமைத் தேர்தல் அதிகாரி அனுப்பிய பரிந்துரை அடிப்படையில் 2 நாட்களில் முடிவு எடுப்பதாக தேர்தல் ஆணையம் தரப்பு தெரிவித்தது. ஆனால் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் வரை நீதிமன்றம் காத்துகொண்டிருக்க முடியாது. பாதுகாப்பு குறைபாடு காரணத்திற்காக மாவட்ட ஆட்சியர் இட மாற்றம் குறித்த கோரிக்கையில் இன்று மாலை உத்தரவிடுகிறோம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close