[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வரும்காலத்தில் சிறுபான்மை மக்களுக்கு பாஜக அரசு பாதுகாப்பாக இருக்கும் என மோடி பேசியது ஆறுதல்- திருமாவளவன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS 5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்
  • BREAKING-NEWS காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்

குருதாஸ்புரில் பாஜக வேட்பாளராக களமிறங்குகிறார் சன்னி தியோல்

sunny-deol-is-bjp-candidate-in-gurdaspur

பாலிவுட் நடிகர் சன்னி தியோல் பஞ்சாப் மாநிலத்தின் குருதாஸ்புரில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான 26ஆவது வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டது. இந்தப் பட்டியலில் பஞ்சாப் மாநிலத்தின் குருதாஸ்புர் மற்றும் ஹோசியார்புர் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அத்துடன் சண்டிகர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயரும் அறிவிக்கப்பட்டது. 

           

இந்நிலையில், குருதாஸ்புரில் பாஜக சார்பில் பிரபல பாலிவுட் நடிகர் சன்னி தியோல் களமிறங்குகிறார். இந்தத் தொகுதியில் கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் பழம் பெரும் பாலிவுட் நடிகர் வினோத் கண்ணா வெற்றி பெற்றிருந்தார். வினோத் கண்ணா 2017ஆம் ஆண்டில் மறைந்தார். இதனையடுத்து நடைபெற்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி குருதாஸ்புர் தொகுதியை வென்றது. இந்த முறை இத்தொகுதியை மீண்டும் பாஜக வெல்ல முனைப்புடன் செயல்பட்டுவருகிறது.

முன்னதாக இன்று காலை மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் நிர்மலா சீத்தாராமன் முன்னிலையில் சன்னி தியோல் பாஜகவில் இணைந்தார். அப்போது அவர், “என்னுடைய தந்தை எவ்வாறு அட்டல் பிஹாரி வாஜ்பேயின் மேல் பற்றுடன் இருந்தாரோ அதேபோல் நான் மோடியிடம் பற்றுடன் உள்ளேன். அதனால் நான் பாஜக வளர என்ன வேண்டுமானாலும் செய்வேன். நான் இதுகுறித்து அதிகம் பேசாமல் செயலில் காட்டுகிறேன்” எனத் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close