[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம் தனித்தன்மையுடன் விளங்குகிறது என்பதையே திமுக பெற்றுள்ள வெற்றி காட்டுகிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பெரம்பலூர் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் 6,83,697 வாக்குகள் பெற்று வெற்றி
  • BREAKING-NEWS களத்தில் இறங்கியபோது உறுதியளித்தபடி தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது; திமுகவின் வெற்றிக்கு உழைத்த தொண்டர்களுக்கு நன்றி -மு.க. ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளிவந்துள்ளது; இரண்டு தேர்தல்களிலும் நாம் எதிர்பார்த்த பெரிய வெற்றியை பெற்று தந்துள்ள மக்களுக்கு நன்றி - ஸ்டாலின்
  • BREAKING-NEWS பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்; மோடி அரசு ஜனநாயக கொள்கைகளை காக்கும் என நம்புகிறேன் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS கர்நாடக எம்எல்ஏக்கள், அமைச்சர்களுடன் நாளை முதல்வர் குமாரசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS ஈரோடு மக்களவை தொகுதி மதிமுக வேட்பாளர் கணேச மூர்த்தி 2,10,618 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

ஆண்களை பின்னுக்கு தள்ளிய பெண் வாக்காளர்கள் - நாடாளுமன்ற கள நிலவரம்

tn-men-votes-in-large-nos-than-women-in-some-constituencies

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்றைய முன்தினம் நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவில் தமிழ்நாட்டில் 71.90% வாக்குகள் பதிவாகின. இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு அளவில் ஆண்களைவிட பெண்களே அதிகம் வாக்களித்துள்ளனர். அதாவது 2,07,27,179 ஆண்களும் 2,12,96,722 பெண்களும் வாக்களித்தனர். 

இந்நிலையில் பெண்களைவிட ஆண்கள் சில தொகுதிகளில் அதிகளவில் வாக்களித்துள்ளனர். அந்தத் தொகுதிகள் எவை?

நாடாளுமன்றத் தொகுதிகள்     வாக்களித்த ஆண்கள்    வாக்களித்த பெண்கள்    
திருவள்ளூர்                                       6,99,869                                      6,95,221                                
வடசென்னை                                    4,74,635                                       4,69,507                                
தென்சென்னை                                 5,65,691                                       5,45,973                                
மத்திய சென்னை                            3,99,484                                       3,83,056                                
ஸ்ரீபெரும்பதூர்                                 7,08,203                                       6,80,209                              
காஞ்சிபுரம்                                        6,13,215                                       6,00,820                                
கிருஷ்ணகிரி                                   5,85,933                                        5,67,767                                   
தருமபுரி                                            6,07,597                                         5,86,807                                   
சேலம்                                               6,38,283                                          6,08,152                                  
திருப்பூர்                                           5,66,400                                          5,49,365                                      
கோவை                                           6,41,620                                          6,11,769                                   


இந்தத் தரவுகளை வைத்து பார்க்கும்போது குறைவான வாக்குகள் பதிவாகியுள்ள சென்னையின் அனைத்து தொகுதிகளிலும் பெண்களைவிட ஆண்களே அதிகம் வாக்களித்துள்ளனர். அதேபோல தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் பதிவான தருமபுரியிலும் (80.49) பெண்களைவிட ஆண்களே அதிகம் வாக்களித்துள்ளனர். அத்துடன் குறைந்த அளவில் வாக்குப்பதிவான தொகுதிகளில் அதிகம் ஆண்களே வாக்களித்துள்ள தகவலும் இந்தத் தரவுகள் மூலம் தெரிகிறது. ஆக, அட்டவணையில் குறிப்பிட்டுள்ள தொகுதிகளை தவிர, தமிழகம் முழுவதும் மீதமுள்ள 27 தொகுதிகளில் பெண்களே அதிகம் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close