[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

கைகள் இல்லை; கால் விரலில் மை - நம்பிக்‘கை’யளிக்கும் சபிதா மோனிஸ்

sabita-monis-votes-in-dakshin-kannada-s-belthangady-constituency

கர்நாடகா மாநிலத்தின் தக்‌ஷின் கன்னடா மாவட்டத்திலுள்ள பெல்தங்கடி வாக்குச்சாவடி இரண்டு கைகளுமில்லாத மாற்றுத்திறனாளி சபிதா மோனிஸ் வாக்களித்தார். 

இரண்டாம் கட்ட நாடாளுமன்றத் தேர்தல் இந்தியா முழுவதும் இன்று நடைபெற்றுவருகிறது. இந்தத் தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுவாக மக்கள் சிலர் வாக்களிக்க செல்லாது நிலையில் கர்நாடகாவில் இருக்கும் மாற்றுத் திறனாளி பெண் ஒருவர் அனைத்து தேர்தல்களிலும் ஆவலுடன் வாக்களித்து வருகிறார். 

         

கர்நாடகா மாநிலம் மங்களூரூவில் பிறந்தவர் சபிதா மோனிஸ்(30). இவர் பிறக்கும் போதே தனது இரண்டு கைகளையும் இழந்து விட்டார். எனினும் இது அவரை சாதாரன வேலை செய்வதிலிருந்து முடக்கவில்லை. இவர் அனைத்து தடைகளையும் கடந்து தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார். அத்துடன் தனக்கு வாக்குரிமை கிடைத்த பின்பு அனைத்து தேர்தல்களிலும் தவறாமல் வாக்களித்து வருகிறார்.

          

அந்தவகையில் இன்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தக்‌ஷின் கன்னடா பகுதியிலுள்ள பெல்தங்கடி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். ஒருவர் வாக்களித்தால் அவருக்கு கை விரலில் மை வைக்கப்படும். சபிதாவிற்கு இரண்டு கைகளும் இல்லாததால் அவருக்கு கால் விரலில் மை வைக்கப்பட்டது. சாதரான மக்கள் பலர் தங்களுக்கு வாக்குரிமை இருந்தும் வாக்களிக்காத நிலையில் இவர் தவறாமல் வாக்களித்து ஜனநாயக கடமையை செவ்வேன செய்துவருகிறார். இதன்மூலம் ஏன் வாக்களிக்க வேண்டும் என்று கேள்வி கேட்பவர்களுக்கு நல்ல விடை அளிக்கும் விதமாக இவரின் செயல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close