[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.25 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.37 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும் தேசிய ஜனநாயக கட்சி நாடாளுமன்ற குழு கூட்டத்தில் அனைவரும் சேர்ந்து நரேந்திர மோடியை தலைவராக தேர்வு செய்ய உள்ளனர்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் எம்.பி.க்கள் நாளை சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கின்றனர்
  • BREAKING-NEWS நீங்கள் வெற்றிபெற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்- மோடிக்கு கமல்ஹாசன் கோரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.24 காசுகளாகவும் விலை நிர்ணயம்

வாக்குப்பதிவு எந்திரம் பழுது: கமல்ஹாசன், ஸ்ருதி காத்திருப்பு

evm-is-not-working-kamalhassan-waiting

வாக்குப் பதிவு எந்திரம் பழுதானதால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அவர் மகள் நடிகை ஸ்ருதிஹாசன் ஆகியோர் வாக்களிக்க முடியாமல் காத்திருக்கின்றனர்.

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இன்று நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 8,293 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாக கண்டறியப்பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது. மக்கள் ஆர்வத்துடன் காலை முதல் வாக்களித்து வருகின்றனர். நடிகர் அஜீத், விஜய் உட்பட நடிகர், நடிகைகளும் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், இன்று காலை தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச் சாவடிக்கு வந்து வரிசையில் நின்றார். வாக்குப் பதிவு எந்திரம் பழுதானதால் அவர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தார். அவருடன் தென் சென்னை வேட்பாளர் ரங்கராஜனும் காத்திருந்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close