[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேதார்நாத்தில் வழிபட்டதை நான் அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்; எனக்கும் கேதார்நாத்துக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது - பிரதமர் மோடி

மக்களுடன் மக்களாக வரிசையில் நின்று வாக்களித்த முதலமைச்சர் பழனிசாமி..!

cm-palanisamy-casting-his-vote

சேலம் எடப்பாடி சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில், வரிசையில் நின்று முதலமைச்சர் பழனிசாமி வாக்களித்தார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வரகின்றனர். அஜித், விஜய் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் தங்களது ஜனநாயக கடமையைாற்றினர். இதனிடையே சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் சேலம் எடப்பாடி சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில், வரிசையில் நின்று முதலமைச்சர் பழனிசாமி வாக்களித்தார். முன்னதாக சாலையில் தனி ஆளாக நடந்து வந்த முதலமைச்சர் பழனிசாமி மக்களோடு மக்களாக வரிசையில் நின்றார். அதன்பின் வாக்களித்த முதலமைச்சர் பழனிசாமி, வாக்களித்ததன் அடையாளமாக விரல் மையை காட்டினார். தொடர்ந்து தமிழகத்தில் பலரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close