[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

“மத்திய பாதுகாப்பு படையை துடைப்பத்தால் விரட்டி அடிப்போம்” - திரிணாமுல் சர்ச்சை பேச்சு

chase-central-forces-away-with-brooms-says-trinamool-lawmaker-on-polls

மத்திய பாதுகாப்பு படையை துடைப்பத்தால் விரட்டி அடிக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ரத்னா கோஷ் தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலத்திலுள்ள டார்ஜிலிங், ஜல்பாய்குரி மற்றும் ராய்கன்ஞ் ஆகிய பகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற்றவுள்ளது. இந்நிலையில் மேற்வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ரத்னா கோஷ் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

     

ரத்னா கோஷ் பேசியுள்ள வீடியோவில், “மத்திய பாதுகாப்பு படை வீரர்களை துடைப்பத்தால் அடித்து விரட்டவேண்டும். ஏனென்றால் போரில் வெற்றி பெறுவதற்கு எல்லாமே நல்ல வழிதான். நான் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் செல்வேன். அங்குள்ள மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் குறித்து கவலைப்பட தேவையில்லை. அவர்கள் மிகவும் கெடுபிடியாக நடந்தால் நம்முடைய மகிலா மோர்சா சகோதரிகளை வைத்து பாதுகாப்பு படை வீரர்களை துடைப்பத்தால் விரட்டி அடிக்க சொல்வேன். 

          

மேலும் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மத்திய படை வீரர்கள் எவ்வாறு நமது தொண்டர்களை அடித்தார்கள் என்பது எனக்கு தெரியும். இந்த முறையும் அது நடக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் இம்முறை அதைக் கண்டு நாம் பயப்பட தேவையில்லை” எனத் தெரிவித்தார். முன்னதாக மேற்கு வங்கத்தில் முதற்கட்ட நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. மொத்தமாக மேற்கு வங்கத்தில் முதற்கட்ட தேர்தலில் 80.09% வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close