[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை

116 வயதிலும் ஜனநாயக கடமையாற்றப் போகும் முதியவர்

assam-116-year-old-to-cast-his-vote-in-karimganj

வாக்களிக்கும் ஆர்வம் குறைந்து வருவதாகக் கூறப்படும் காலக்கட்டத்தில், 100 வயதை தாண்டிய வாக்காளர் ஒருவர், வரும் தேர்தலில் வாக்களிக்க உள்ளார். இந்தியாவின் வயதான வாக்காளர்களில் ஒருவர் என்ற பெருமைக்கு இவர் சொந்தக்காரர்.

தனது தள்ளாத வயதிலும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கிறார் அசாம் மாநிலம் கரிம்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த மெஹ்முத் அலி. இவருக்கு வயது 116 எனக் கூறப்படுகிறது. 1903 ஆம் ஆண்டு பிறந்த இவர் சுதந்திரப் போராட்டங்களிலும் பங்கெடுத்துள்ளார். 

இந்தியாவில்‌ சுதந்திரத்துக்குப் பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தல் காலங்களையும் பார்த்து வந்த இவர், 17 ஆவது மக்களவைத் தேர்தலிலும் வாக்களிக்க உள்ளார். 18 வயது நிரம்பியவுடன் முதல் தேர்தலில் வாக்களிக்கும்போது இளைஞர்களுக்கு எப்போதுமே ஒர் ஆர்வம் இருக்கும். அதே ஆர்வத்துடன் வாக்களிக்க உள்ளார் மெஹ்முத் அலி. இளைஞர்களிடமும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். மேலும் நாம் வாக்களிக்கும் வேட்பாளர் வெற்றி பெறுகிறாரோ இல்லையோ, ஆனால் வாக்களிப்பது நமது கடமை என்கிறார் அவர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close