[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம் தனித்தன்மையுடன் விளங்குகிறது என்பதையே திமுக பெற்றுள்ள வெற்றி காட்டுகிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பெரம்பலூர் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் 6,83,697 வாக்குகள் பெற்று வெற்றி
  • BREAKING-NEWS களத்தில் இறங்கியபோது உறுதியளித்தபடி தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது; திமுகவின் வெற்றிக்கு உழைத்த தொண்டர்களுக்கு நன்றி -மு.க. ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளிவந்துள்ளது; இரண்டு தேர்தல்களிலும் நாம் எதிர்பார்த்த பெரிய வெற்றியை பெற்று தந்துள்ள மக்களுக்கு நன்றி - ஸ்டாலின்
  • BREAKING-NEWS பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்; மோடி அரசு ஜனநாயக கொள்கைகளை காக்கும் என நம்புகிறேன் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS கர்நாடக எம்எல்ஏக்கள், அமைச்சர்களுடன் நாளை முதல்வர் குமாரசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS ஈரோடு மக்களவை தொகுதி மதிமுக வேட்பாளர் கணேச மூர்த்தி 2,10,618 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு: மாலை 4.30 மணிக்கு தீர்ப்பு

vellore-election-case-judgement-on-evening-4-30

வேலூர் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில், இன்று மாலை 4.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது.

கட்டுக் கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் வேலூர் மக்களவை தேர்தலை, தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. அதேசமயம் ஆம்பூர், குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிகளில் திட்டமிட்டப்படி நாளை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் சீனிவாசன் என்பவரது வீட்டில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த பணத்துக்கும், தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் நடத்தக்கோரி அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் இம்மனு விசாரிக்கப்பட்டு வருகிறது. அப்போது வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தலை ரத்து செய்யக்கூடாது என ஏ.சி.சண்முகம் தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அப்படியென்றால் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுபவர்களை போட்டியிட அனுமதிக்க வேண்டுமா..? என கேள்வி எழுப்பினர். இதனையடுத்து ஏ.சி.சண்முகம் தரப்பில், வேட்பாளர் கதிர் ஆனந்தை தகுதிநீக்கம் தான் செய்ய சொல்கிறோம் என வாதிடப்பட்டது. இதனையடுத்து பேசிய நீதிபதிகள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்வு செய்யப்பட்டவரைத்தான் தகுதிநீக்கம் செய்ய முடியும். குறிப்பிட்ட சில வேட்பாளரை மட்டும் எப்படி தகுதிநீக்கம் செய்ய முடியும் என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து ஏ.சி.சண்மும் தரப்பில், வாக்குப்பதிவுக்கு அனைத்தும் தயாராக உள்ள நிலையில் திடீரென தேர்தல் ரத்தாகியுள்ளது எனவும், ஒருவர் செய்த தவறுக்காக தேர்தலையே ரத்து செய்வது தவறான முன்னுதாரணம் எனவும் வாதிடப்பட்டது.

இதனையடுத்து சுயேச்சை வேட்பாளர் சுகுமாறன் தரப்பில், பணம் வைக்கப்பட்டிருந்ததாகத்தான் வருமான வரித்துறை அறிக்கையே தவிர, பட்டுவாடா செய்யப்பட்டதாக எந்த புகாரும் இல்லை. தேர்தல் முடிந்த பின்னர் முறைகேட்டில் ஈடுபட்ட வேட்பாளர் மீது வழக்கு தொடரலாம். ஒருவேளை அவர் வெற்றி பெற்றாலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவரை தகுதி நீக்கம் செய்யவும், தண்டிக்கவும் வழி வகை உள்ளது என வாதிடப்பட்டது.

இதனையடுத்து இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில், தேர்தல் ரத்து முடிவு ஆணையத்தின் முடிவுதான். நாட்டின் தலைவர் என்ற முறையில் குடியரசு தலைவருக்கு அந்த முடிவு பரிந்துரைக்கப்பட்டது. அவரும் ஒப்புதல் அளித்தார் என தெரிவிக்கப்பட்டது. அப்போது சுகுமாறன் தரப்பில், தேர்தல் நியாயமாக நடத்த வேண்டுமென்பதுதான் ஆணைய நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர ரத்து செய்வதாக இருக்க கூடாது என கூறப்பட்டது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், மீதமுள்ள வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட வைக்கப்பட்டது என்றுதான் வருமான வரித்துறை அறிக்கை அளித்தது. மீதமுள்ள தொகை என்றாலே ஏற்கெனவே கொடுக்கப்பட்டது போக மீதி என எளிதாக புரிந்து கொள்ள முடியும் என வாதிடப்பட்டது.

இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வேலூர் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர். இன்று மாலை 4.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close