[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா காலமானார்
  • BREAKING-NEWS பிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை கொண்ட Modi-Journey of a Common Man என்ற வெப் சீரிஸ் தொடரை நிறுத்த ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS 4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில்(தனி) தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாட்டின் மானந்தவாடி பகுதியில் இன்று பிரியங்கா காந்தி வதேரா வாக்கு சேகரிப்பு
  • BREAKING-NEWS பொன்னமராவதி சம்பவத்தால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு
  • BREAKING-NEWS புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு
  • BREAKING-NEWS 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக

395 வாக்காளர்களில் 100 பேரின் பெயர் முனியசாமி: தலைசுற்றி நிற்கும் தேர்தல் பணியாளர்கள்!

100-voters-of-same-name-in-a-village

ஒரே பெயர் கொண்ட100க்கும் அதிகமான வாக்காளர்களை கொண்ட ஒரு கிராமம் தேர்தல் பணிபுரிய வருவோரை தலைசுத்த வைத்திருக்கிறது.

தமிழகம் முழுவதும் நாளை 38 மக்களவை தொகுதி மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மொத்தம் 65 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குசாவடிகளில் வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில், அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. நாளை வாக்குப்பதிவின் போது அரசு ஊழியர்கள், ஆசிரியர் பணியாளர்கள், காவல்துறையினர், ஓய்வுப் பெற்ற ராணுவத்தினர் என 3 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் ஈடுபடுத்தபட உள்ளனர்.

(மாதிரிப்படம்)

தேர்தல் பணிக்காக ஊழியர்களும் தயார் நிலையில் இருக்கின்றனர். இந்நிலையில் ஒரே பெயர் கொண்ட100க்கும் அதிகமான வாக்காளர்களை கொண்ட ஒரு கிராமத்தை கண்டு தேர்தல் பணி ஊழியர்கள் பெருமூச்சு விடுகின்றனர். பாப்பணம் என்ற இந்த கிராமம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ளது. 2019 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் படி, பாப்பணம் கிராமத்தில் மட்டும் 395 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 100க்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர் முனியசாமி என்பதாக இருக்கிறது. ஒரு கிராமத்தில் இத்தனை முனியசாமிகளா என்று தேர்தல் பணிக்கு வருவோர் ஒவ்வொரு முறையும் குழப்பமடைவதாக கிராம மக்கள் கூறுகிறார்கள். 

(மாதிரிப்படம்)

தற்போது நடைபெற உள்ள 2019ம் ஆண்டு மக்களவை தோ்தல் மற்றும் பரமக்குடி சட்டமன்ற இடைத்தோ்தலுக்கு வரும் ஆசிரியர்கள் மற்றும் தேர்‌தல் அதிகாரிகள், ஒரே பெயர் கொண்ட வாக்காளர்களை எப்படி கையாளப்போகிறார்கள் என்று பார்க்க காத்திருக்கிறார்கள்  கிராம மக்கள் நகைச்சுவையாக தெரிவிக்கிறார்கள்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close