[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை அரசால் தேடப்பட்டு வந்த மதகுரு ஹஸிம் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தார் - இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை - அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உத்தரவு
  • BREAKING-NEWS வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்றது - கிழக்கு இந்திய பெருங்கடல்- தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிராக காவல்துறை அதிகாரிகள் 66 பேர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.79 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.34 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலையில் மாற்றமின்றி, டீசல் விலை 8 காசுகள் அதிகரித்து விற்பனை
  • BREAKING-NEWS சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை- பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளும் தீவிர சோதனை

பணப்பட்டுவாடாவில் ஈடுபடுபவர்களை போட்டியிட அனுமதிக்க வேண்டுமா..?: உயர்நீதிமன்றம்

vellore-election-case-enquiry-in-high-court

பணப்பட்டுவாடாவில் ஈடுபடுபவர்களை போட்டியிட அனுமதிக்க வேண்டுமா..? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கட்டுக் கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் வேலூர் மக்களவை தேர்தலை, தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. அதேசமயம் ஆம்பூர், குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிகளில் திட்டமிட்டப்படி நாளை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் சீனிவாசன் என்பவரது வீட்டில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த பணத்துக்கும், தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளார். 

இது ஒருபுறம் இருக்க வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் நடத்தக்கோரி அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் இம்மனு விசாரிக்கப்பட்டு வருகிறது. அப்போது வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தலை ரத்து செய்யக்கூடாது என ஏ.சி.சண்முகம் தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அப்படியென்றால் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுபவர்களை போட்டியிட அனுமதிக்க வேண்டுமா..? என கேள்வி எழுப்பினர். இதனையடுத்து ஏ.சி.சண்முகம் தரப்பில், வேட்பாளரை தகுதிநீக்கம் தான் செய்ய சொல்கிறோம் என வாதிடப்பட்டது. இதனையடுத்து பேசிய நீதிபதிகள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்வு செய்யப்பட்டவரைத்தான் தகுதிநீக்கம் செய்ய முடியும். குறிப்பிட்ட சில வேட்பாளரை மட்டும் எப்படி தகுதிநீக்கம் செய்ய முடியும் என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து ஏ.சி.சண்மும் தரப்பில், வாக்குப்பதிவுக்கு அனைத்தும் தயாராக உள்ள நிலையில் திடீரென தேர்தல் ரத்தாகியுள்ளது என வாதிடப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close