[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்?- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
  • BREAKING-NEWS வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  • BREAKING-NEWS 10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து
  • BREAKING-NEWS காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது

பாஜக- காங். தொண்டர்கள் மோதல்: நடிகை ஊர்மிளாவுக்கு பாதுகாப்பு

urmila-matondkar-gets-police-cover-after-congress-bjp-clash-in-mumbai

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக, மும்பை வடக்கு காங்கிரஸ் வேட்பாளரும் நடிகையுமான ஊர்மிளா மடோன்கர் புகார் கூறியதை அடுத்து அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

தமிழில், கமல்ஹாசன் நடித்த ’சாணக்கியன்’, ’இந்தியன்’ படங்களில் நடித்தவர் பிரபல இந்தி நடிகை ஊர்மிளா மடோன்கர். ராம் கோபால் இயக்கிய ’ரங்கீலா’, ‘சத்யா’ உட்பட ஏராளமான ஹிட் படங்களில் நடித்துள்ள ஊர்மிளா, மலையாளம், கன்னடம், மராத்தி படங்களிலும் நடித்துள்ளார். இவர் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். 

இவர் கட்சி தொண்டர்களுடன் போரிவிலி பகுதியில் பிரசாரத்தில் நேற்று ஈடுபட்டபோது,  பா.ஜனதா தொண்டர்கள் திடீரென மோடிக்கு ஆதரவாக கோஷம் போட்டனர். காங்கிரஸ் தொண்டர்கள் பதிலுக்கு, மோடி திருடன் என்று கோஷமிட்டனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சமாதானப்படுத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஊர்மிளா, போரிவிலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருப் பதால் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று கூறினார். இதையடுத்து அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.  தேர்தல் முடியும் வரை அவருக்கு போலீஸ் பாதுகாப்புத் தொடரும் என மும்பை போலீஸ் துணை கமிஷனர் சங்ராம் சிங் நிஷாந்தர் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close