[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு
  • BREAKING-NEWS 'பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா ?' - இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி
  • BREAKING-NEWS தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது
  • BREAKING-NEWS ஜூன் 28ல் கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும்; கிராம சபைக்கூட்டம் முழுமையாக நடைபெற மக்கள் நீதி மய்யம் எப்போதும் திறம்பட செயல்பட வேண்டும் - கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்

5ல் 1 தபால் ஓட்டு நிராகரிக்கப்படுகிறது... என்ன காரணம்?

reason-for-postal-vote-rejection

ஒவ்வொரு தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போதும் முதலில் முடிவு வெளியாவது, தபால் ஓட்டுகளே. ஆனால், நிராகரிக்கப்படும்  தபால் ஓட்டுகளின்  எண்ணிக்கை ஒவ்வொரு தேர்தலிலும் அதிகரிக்கிறது

தேர்தல் பணிகளில் தொடர்புடைய அதிகாரிகள், ஊழியர்கள், ராணுவத்தினர் தங்கள் வாக்குரிமையை நிலைநாட்ட உள்ள வழி தபால் வாக்கு. இதை செலுத்துவதற்கென தனி நடைமுறையே உள்ளது. அதை நிறைவு செய்யாமல் செலுத்தப்படும் தபால் ஓட்டுகள் நிராகரிக்கப்படுகின்றன. வாக்காளரின் பிறந்த தேதி, கையொப்பம் ஆகியவை பொருந்தாமல் போவது, முகவரியை சரியாக குறிப்பிடாதது ஆகியவை தபால் ஓட்டு நிராகரிக்கப்பட முக்கிய காரணங்களாக உள்ளன.

2004ஆம் ஆண்டில் பதிவான தபால் ஓட்டுகளில் 16 சதவிகிதம் நிராகரிக்கப்பட்ட நிலையில், 2009 தேர்தலில் பதிவான 11.5 லட்சம் தபால் ஓட்டுகளில் 19.5 சதவிகிதம் செல்லாது என அறிவிக்கப்பட்டன. 2014ஆம் ஆண்டில் பதிவான 5.6 லட்சம் தபால் ஓட்டுகளில் 21.5 சதவிகிதம் நிராகரிக்கப்பட்டன. இது 5 தபால் ஓட்டுகளில் ஒரு ஓட்டு நிராகரிக்கப்பட்டதைக் குறிக்கிறது. மொத்தமாக, 2004, 2009 மற்றும் 2014 தேர்தல்களில் 23.2 லட்சம் தபால் ஓட்டுகள் பதிவான நிலையில், 4.4 லட்சம் ஓட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர் செலுத்தும் தபால் வாக்கில் இடம்பெறும் அதிக தவறுகள், கவனக்குறைவுகளே ஓட்டுகள் நிராகரிக்கப்பட காரணமாகின்றன. வேட்பாளர் தேர்வுக்கான இடத்தை நிரப்பாமல் விடுவதை பலர் செய்யும் நிலையில், ஓட்டுப் பதிவுக்கான முத்திரையிடும் இடத்தில் பாரத் மாதா கீ ஜெய் என எழுதிவிடும் விசித்திரமும் நடக்கவே செய்கிறது.

தபால் ஓட்டு போடும் முறை குறித்து பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்துவதாகவும், விரிவாக விளக்கம் தரப்படுவதாகவும் கூறுகிறார் தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர். ஆங்கிலம் மற்றும் அவரவர் மாநில மொழியிலும் நேரிலும், எழுத்துமூலமாகவும் தபால் ஓட்டு முறை விளக்கப்பட்டும், செல்லாத தபால் ஓட்டுகள் எண்ணிக்கை அதிகரிப்பது ஏமாற்றமளிப்பதாகக் அவர் கூறுகிறார் .

செல்லாத தபால் ஓட்டுகளைப் போடும் அதிகாரிகள், ஊழியர்கள்தான் நாட்டின் ஒட்டுமொத்த தேர்தலையும் நடத்துகின்றனர் என்பதுதான் இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயமாக இருக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close