[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

’எனக்கு வாக்களிக்கவில்லை என்றால்...’: மேனகா காந்திக்கு நோட்டீஸ்!

maneka-gandhi-gets-notice-for-telling-muslims

சர்ச்சையாக பேசிய மத்திய அமைச்சர் மேனகா காந்தியிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி போட்டியிடுகிறார். அவர் கடந்த முறை உத்தரப் பிரதேசத்தின் பிலிபிட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை அந்த தொகுதியில் அவரது மகன் வருண் காந்தி போட்டியிடுகிறார் என்பதால் மேனகா காந்தி, சுல்தான்பூர் தொகுதியில் களமிறங்கியுள்ளார். அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய மேனகா காந்தி, ’’நான் உறுதியாக, இந்தத் தொகுதியில் வெற்றி பெற போகிறேன். இந்த வெற்றியில் இஸ்லாமியர்களின் பங்கு இல்லாவிட்டால் அது நன்றாக இருக்காது. அத்துடன் இங்குள்ள இஸ்லாமியர்கள் எனக்கு வாக்களிக்காமல், வெற்றி க்குப் பின் என்னிடம் வேலை கேட்டுவந்தால் அவர்களுக்கு நான் ஏன் உதவி செய்யவேண்டும்? அதனால் எனக்கு வாக்களித்தால்தான் அவர் களுக்கு உதவி செய்வேன். இது ஒரு வகையில் கொடுத்து வாங்கும் கொள்கை போன்றதுதான்’’ என்று கூறினார்.

மேனகா காந்தியின் இந்தப் பேச்சு சர்ச்சையானது. இதற்கு காங்கிரஸ் கட்சியில் செய்தி தொடர்பாளர் சஞ்சய் கான், “மேனகா காந்தியின் இந்தப் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. வாக்களிக்க மக்களை வற்புறுத்துவது தவறு. தேர்தல் ஆணையம் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, தனது பேச்சு திரித்து வெளியிடப்பட்டுள்ளது என்று மேனகா காந்தி கூறியுள்ளார். ‘’நான், முஸ்லீம்கள் மீது அதிக அன்பு செலுத்து கிறேன். பாஜக சிறுபான்மை பிரிவினர் கூட்டத்தை நான்தான் கூட்டினேன். அதில் தவறாக எதுவும் பேசவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் கேட்டு, மேனகா காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுபற்றி கூடுதல் தேர்தல் அதிகாரி பிஆர் திவாரி கூறும்போது, ‘’இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டுள்ளது. அதன்படி சுல்தான்புர் மாவட்ட மாஜிஸ்திரேட் மேனகா காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்’’ என்றார். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close