[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்
  • BREAKING-NEWS கொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

விதவிதமான வீடியோ பிரச்சாரம்.. வரிந்து கட்டும் அரசியல் கட்சிகள்...

tamilnadu-politicians-create-video-for-campaign

நாடாளுமன்றத்தேர்தல் தேதி நெருங்கியுள்ள நிலையில் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் வீடியோ விளம்பரங்கள் மூலம் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. 

பாஜக தனது ட்விட்டர் பாக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஒரு பணக்காரப்பெண் காரில் தனது சொந்த ஊரான பாட்டி ஊருக்கு  குடும்பத்துடன் செல்கிறார். செல்லும் முன் பாட்டி ஊரை நினைத்து மிகவும் தனது அம்மாவிடம் கடிந்து கொள்கிறார். காரணம் அங்கு வீடு, மின்சாரம், மின்விசிறி, கழிவறை ஆகியன இல்லை என்பதே. ஆனால் ஊருக்கு சென்றதும் பார்த்து ஆச்சரியப்படுகிறார்.

 

ஏனென்றால் அங்கு மேற்கூறிய அனைத்தும் இருக்கிறது. எப்படி இது சாத்தியம் என தனது தாத்தாவிடம் அந்தப் பெண் கேட்கிறார். அதற்கு அவர், மோடியின் புகைப்படத்தை காட்டுகிறார். மேலும் மோடியின் திட்டங்கள் குறித்தும் விளக்குகிறார். இறுதியாக மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்று முடிகிறது.

இதேபோல் திமுகவும் பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறது. அந்த வீடியோக்கள் ஒன்றில் ஒரு பெண் பேசுகிறார். அதில், “ ஒரு பெண்ணை பெத்து வளர்க்க இங்க என்ன பாதுகாப்பு இருக்கு. போலீஸ்காரர்கள் முதல் ஆளுங்கட்சிகாரர்கள் வரைக்கும் எல்லாரும் சேர்ந்து நம் தமிழ்நாட்டையே தலைகுணிய வைத்துவிட்டார்கள். இப்ப வெட்கமே இல்லாம ஓட்டு கேட்க வராங்க. ஆதிக்கவாதிகளும் வேண்டாம். அடிமைகளும் வேண்டாம்.” எனக் கூறி முடிக்கிறார். 

இதேபோல் மற்றொரு வீடியோவில் பேசும் பெண் “காய்கறியில் இருந்து மளிகை சாமான் வரைக்கும் எல்லா பொருட்களும் தலைக்கு மேல் விலை ஏறிடுச்சு. 8 வருஷமா இவங்கதானே ஆட்சில இருக்காங்க? டெல்லி காலில் விழுந்து மெகா கூட்டணி அமைக்குறதுல மட்டும் மும்முரமா இருக்குறவங்க நமக்கு தேவையா?ஆதிக்கவாதிகளும் வேண்டாம். அடிமைகளும் வேண்டாம்” எனக் கூறுகிறார். 

அதிமுக வெளியிட்டுள்ள வீடியோவில், “தொடரட்டும் இந்தப் பொற்காலம். ஜொலிக்கட்டும் வரும் எதிர்காலம். திமுக ஆட்சியில் 15 புதிய மருத்துவ கல்லூரிகள் மட்டுமே தொடங்கப்பட்ட நிலையில், அதிமுக ஆட்சியில் 40 புதிய மருத்துவகல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. மத்தியில் நல்லாட்சி தொடரட்டும். மாநிலத்தில் வளர்ச்சி பெருகட்டும். வாக்களிப்பீர் அதிமுக கூட்டணிக்கு” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close