[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

“ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் தயார்” - டெல்லி பொறுப்பாளர் 

congress-willing-to-go-for-alliance-with-aam-aadmi-party-in-delhi

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் தயாராகவுள்ளது என காங்கிரஸ் கட்சியின் டெல்லி பொறுப்பாளர் பி.சி. சாக்கோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக 91 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. டெல்லியிலுள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் வரும் மே 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக காங்கிரஸ் கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவந்தனர். இந்தக் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருவதாக தகவல்கள் வெளிவந்தன.  

இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பி.சி.சாக்கோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர். “ஆம் ஆத்மி கட்சி விரும்பினால் நாங்கள் அவர்களுடன் கூட்டணி வைக்க தயாராகவுள்ளோம். ஆம் ஆத்மி கட்சி 4 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளிலும் போட்டியிடும் எனப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும் இதுவரை அவர்கள் கூட்டணிக்கு உடன்படாததால் நாங்கள் தனியாக தேர்தல் சந்திக்க உள்ள நிலை உருவாகியுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிக்கப்படும்.” எனத் தெரிவித்தார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close