[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த நிர்வாகி உயிரிழப்பு : வாக்குப்பதிவின் போது வன்முறை ! 

tdp-worker-was-died-in-clashes-between-tdp-and-ysrcp-worker-in-tadipatri-assembly-constituency-at-anantapur-district-of-andhra-pradesh

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு நடைப்பெற்று வரும் நிலையில் தெலுங்குதேசம்- ஒய்எஸ்ஆர் கட்சி தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டு தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் உயிரிழந்தார்.

மக்களவைத் தேர்தல் இன்று தொடங்கி, மே 19 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியுள்ளது. 20 மாநிலங்களில் உள்ள 91 மக்களவைத் தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. அதோடு, ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் வாக்குப் பதிவு இன்று தொடங்கியுள்ளது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள தாடிபத்ரி பகுதியில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். அப்போது திடீரென தெலுங்குதேசம்- ஒய்எஸ்ஆர் கட்சி தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் உயிரிழந்தார். வாக்குசாவடி முன்பு வாக்கு சேகரித்ததால் இந்த மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மோதலில் கட்சி நிர்வாகி ஒருவர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலத்த பாதுகாப்புடன் போலீசார் அந்த பகுதியில் குவிந்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close