[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.77 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS இலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்வு
  • BREAKING-NEWS மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் சஸ்பெண்ட்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை
  • BREAKING-NEWS திருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

அதிக எண்ணிக்கையில் வாக்களித்து சாதனைப் படைக்க பிரதமர் வேண்டுகோள்

pm-modi-tweet-asking-people-to-vote-in-large-numbers

மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவில் மக்கள் அதிகளவில் வாக்களித்து சாதனைப் படைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

மக்களவைத் தேர்தல் இன்று தொடங்கி, மே 19 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியுள்ளது. 20 மாநிலங்களில் உள்ள 91 மக்களவைத் தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. 
ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் இன்று வாக்குப் பதிவு தொடங்கியுள்ளது.

இந்நிலையில் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். பிரதமர் மோடி, ‘’2019 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்கிவிட்டது. முதல்கட்ட தேர்தலில் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களித்து சாதனை படைக்க வேண்டும். முதல்முறையாக வாக்களிக்க தகுதிபெற்ற வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும்’ என்று ட்விட்டரில் கேட்டுக் கொண்டுள்ளார்.

பாஜக தலைவர் அமித் ஷாவும், அதிகளவில் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். ‘வடகிழக்குப் பகுதிகளில் அமைதி தொடர வேண்டும் என்றால், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிஸோராம், நாகலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுரா மாநில சகோதர, சகோதரிகளிடம் கேட்டுக்கொள்கிறேன், அதிகளவில் வாக்களியுங்கள்’’ என்று கூறியுள்ளார்.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘’இந்த ஜனநாயக திருவிழாவில் அனைவரும் பங்கேற்று வாக்களிக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close