[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு

பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்த திமுகவிற்கு தகுதி இல்லை - எடப்பாடி பழனிசாமி 

edappadi-pazhanisamy-campaign-in-perambalur

திமுகவை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் மீது பாலியல் குற்றச்சாட்டு உள்ள நிலையில், அடுத்தவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு திமுகவினருக்கு எந்தத் தகுதியும் இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பெரம்பலூரில் என்.ஆர்.சிவபதியை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுகவை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் மீது, பாலியல் குற்றச்சாட்டு உள்ள நிலையிலும், சிலர் சிறையில் உள்ள நிலையிலும், அடுத்தவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு எந்தத் தகுதியும் திமுகவினருக்கு இல்லை எனத் தெரிவித்தார்.

மேலும், “திமுக கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. அந்தக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக ஒரு கட்சி அல்ல கம்பெனி என ஏற்கெனவே கூறினார். அவர் தற்போது திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வராக்குவதே, எனது பணி எனக் கூறி வருகிறார். இது கேளி கூத்தாக உள்ளது.

2 ஜீ ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கி முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் சிறை சென்று வந்தது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் அதிமுகவை பார்த்து ஊழல் கட்சி எனக் கூறுவதற்கு ஸ்டாலினுக்கு என்ன தகுதியுள்ளது? மேடைக்கு மேடை பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார் ஸ்டாலின். 

தனது கட்சியை சேர்ந்த முன்னாள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி தண்டனைப் பெற்று சிறையில் உள்ள நிலையில், அவரை கட்சியை விட்டு நீக்காமல், இன்னும் திமுகவின் மாவட்ட துணைச் செயலாளராக நீடிக்க வைத்துள்ளார் ஸ்டாலின். இதிலிருந்தே, பாலியல் சம்பவங்களுக்கு யார் ஆதரவாக உள்ளனர் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

பெரம்பலூர் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வக்குமார், பியூட்டி பார்லர் புகுந்து பெண் என்றும் பாராமல், தாக்குதல் நடத்திய சம்பவம் நாடே அறிந்தது. இதுபோன்ற பெண்களுக்கு எதிரான சம்பவங்களில் ஈடுபடுவது திமுகவினரே என்பது நிரூபனமாகியுள்ளது.

அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளதால்தான், ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோதுகூட மதுரைக்கு சென்று வரமுடியாத சூழ்நிலை இருந்து வந்த நிலையில், தற்போது மதுரை நகருக்கு சென்று வலம் வந்துள்ளதாக தெரிவித்தார்.
 
60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோதாவரி-காவேரி இணைக்கப்பட்டு, காவேரிலிருந்து நீர் எடுக்கப்பட்டு, நீரின்றி வறண்டு கிடக்கும் ஏரி, குளங்களை நிறப்ப நடவடிக்கை எடுக்கப்படும். பெரம்பலூர் மாவட்டம் மலையாளப்பட்டி பகுதியில் சின்னமுட்லு அணை கட்டப்படும். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை பாடாலூரில் விபத்து அவசர சிகிச்சை மையம் தொடங்கப்படும்.”  என முதலமைச்சர் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close