[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்வு
  • BREAKING-NEWS மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் சஸ்பெண்ட்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை
  • BREAKING-NEWS திருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு

it-raid-at-vellore-case-filed-in-katpadi

வேலூரில் வருமான வரித்துறை சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அத்துடன் துரைமுருகனின் மகனும், வேலூர் மக்களவை தொகுதியின் திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்துக்கு சொந்தமான பள்ளி, கல்லூரியிலும் சோதனை நடத்தப்பட்டது. அத்துடன் பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான சிமென்ட் குடோனிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கட்டுக் கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் வேலூரில் நடைபெற்ற வருமான வரித்துறையினரின் சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக காட்பாடி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார். அதன்படி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், சீனிவாசன், தாமோதரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதனிடையே தமிழகத்தில் பறக்கும் படையினரால் இதுவரை ரூ.124.53 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close