[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா காலமானார்
  • BREAKING-NEWS பிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை கொண்ட Modi-Journey of a Common Man என்ற வெப் சீரிஸ் தொடரை நிறுத்த ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS 4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில்(தனி) தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாட்டின் மானந்தவாடி பகுதியில் இன்று பிரியங்கா காந்தி வதேரா வாக்கு சேகரிப்பு
  • BREAKING-NEWS பொன்னமராவதி சம்பவத்தால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு
  • BREAKING-NEWS புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு
  • BREAKING-NEWS 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக

“எதிர்க்கட்சிகளிடம் நாட்டின் பாதுகாப்பு குறித்து எந்தத் திட்டமும் இல்லை”- மோடி 

prime-minister-narendra-modi-has-said-that-there-is-no-plan-for-the-opposition-to-national-security

தேசிய பாதுகாப்பு குறித்து எதிர்கட்சிகளிடம் எந்தத் திட்டமும் இல்லை எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கோவை கொடிசியா மைதானத்தில் அதிமுக, பாஜக கூட்டணி பரப்புரை நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். 

அக்கூட்டத்தில், வணக்கம் என தமிழில் கூறி பிரதமர் மோடி உரையை தொடங்கினார். மேலும் மருதமலை முருகனுக்கு அரோகரா என பிரதமர் உரையை ஆரம்பித்தார். 

அப்போது பேசிய அவர், “உலக அளவில் தமிழர் பண்பாடு பிரசித்தி பெற்றது . அதிகாரத்தை கைப்பறற எதிர்கட்சிகள் துடித்து கொண்டிருக்கின்றன. கல்வி வளமும் தொழில் வளமும் மிகுந்த கோவை நகரத்தில் உரையாற்றுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. 

நாட்டின் பாதுகாப்பில் எந்தச் சமரசமும் செய்து கொள்ளாமல் இருக்கிறோம். தேசிய பாதுகாப்பு குறித்து எதிர்கட்சிகளிடம் எந்தத் திட்டமும் இல்லை. 21 ஆம் நூற்றாண்டில் இந்தியா எப்படி இருக்க போகிறது என்பதை தீர்மானிக்கும் முக்கியமான தேர்தல் இது. 

பாதுகாப்பான இந்தியாவை உருவாக்குவதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது. எம்.ஜி.ஆர் ஜெயலலிதா எண்ணங்கள் நம்மை வழிநடத்தும் என எண்ணுகிறேன். நிலையான ஆட்சி அமைய வேண்டும் எனத் தேசிய ஜனநாயக கூட்டணி விரும்புகிறது. பாதுகாப்பு தளவாட மையங்கள் தமிழகத்தில் அமையும்போது வேலைவாய்ப்பு முதலீடு அதிகரிக்கும். 

தேசியம் பற்றி மோடி ஏன் பேசுகிறார் என்று எதிர்கட்சிகள் கேட்கின்றனர். தேசியம் பற்றி பேசுவது குற்றமா? நம் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால் வட்டியும் முதலுமாக திருப்பி பதிலடி கொடுக்கப்படும். தேசியவாதிகளாகவே இருந்தோம். தேசியவாதிகளாகவே இருக்கிறோம். தேசியவாதிகளாகவே இருப்போம். எதிரி நாடு மீது எதிர்க்கட்சி  மென்மையாக நடந்து கொள்கிறது. 

தேசியத்தன்மைதான் அனைவரும் வங்கி கணக்கு. எதிர்க்கட்சிகள் எண்ணங்கள் நாட்டை பாதுகாக்க உதவாது. காங்கிரஸ் அறிக்கையில் நடுத்தர மக்களை பற்றி எந்த வார்த்தையும் குறிப்பிடவில்லை. நடுத்தர மக்களை வஞ்சிப்பது காங்கிரசுக்கு ஒன்றும் புதிதல்ல. ” எனப் பேசினார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close