[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு
  • BREAKING-NEWS 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக
  • BREAKING-NEWS விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி63 படத்திற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு - விஜய் நடிக்கும் 63வது படத்தின் கதை தன்னுடையது என குறும்பட இயக்குநர் செல்வா என்பவர் வழக்கு
  • BREAKING-NEWS அமமுக கடைசிவரை குழுவாக மட்டுமே இருக்க முடியும்; கட்சியாக மாற வாய்ப்பில்லை - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போது நடந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளில் 75.57% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ

தமிழகத்தில் திமுக, இந்தியாவில் பாஜக - டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு

timesnow-vmr-survey-predicts-33-seats-to-dmk-and-6-seats-to-aiadmk

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் என்று டைம்ஸ் நவ் நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 11ம் தேதி தொடங்குகிறது. வாக்குப் பதிவு தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வரை தான் கருத்துக் கணிப்புகள் வெளியிட முடியும். அதனால், பல்வேறு தரப்பினரும் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். 

அந்த வகையில் டைம்ஸ் நவ்-விஎம்ஆர் இணைந்து கருத்துக் கணிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அந்த கருத்துக் கணிப்பின் படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 279 இடங்களையும், காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 149 இடங்களையும் கைப்பற்றும். இந்த கூட்டணியில் இல்லாத கட்சிகள் 115 இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளது. 

அதேபோல், தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 33 இடங்களிலும், அதிமுக கூட்டணி 6 இடங்களிலும் வெற்றி பெறும் என்று இந்த கருத்துக் கணிப்பு கூறுகின்றது. வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி 53.12%, அதிமுக கூட்டணி 39.61% வாக்குகள் பெறும். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close