[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

“முதலமைச்சர் விவசாயி அல்ல; விஷ வாயு” - மு.க. ஸ்டாலின் 

mk-stalin-condem-cm-palanisamy-in-election-campaign-at-villupuram

விவசாயிகளிடம் இருந்து நிலங்களை எடுக்க துணை நின்றவரும், விவசாயிகளை கைது செய்தவரும் எப்படி விவசாயி ஆவார் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், விவசாயிகளிடம் இருந்து நிலங்களை எடுக்க துணை நின்றவரும், விவசாயிகளை கைது செய்தவரும் எப்படி விவசாயி ஆவார் என விமர்சித்தார். 

Image result for தேர்தல் பரப்புரை,திமுக ,மு.க. ஸ்டாலின் ,விவசாயி, விழுப்புரம்

இதனையடுத்து பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திமுக தேர்தல் அறிவிக்கையில் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றியதாகவும், அதிமுக அரசு மக்களை ஏமாற்றி வருவதாகவும் கூறினார். மேலும் முதலமைச்சர் பழனிசாமி விவசாயி அல்ல விஷவாயு என்றும் ஸ்டாலின் விமர்சித்தார். 

Image result for தேர்தல் பரப்புரை,திமுக ,மு.க. ஸ்டாலின் ,விவசாயி, விழுப்புரம்

8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் எடுக்க துணை நின்றவர் விவசாயி ஆவாரா? 154 ஏரிகள், 341 குளங்களை அழிக்க துணை நின்றவர் விவசாயி ஆவாரா? 30,000 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்த காரணமானவர் பழனிசாமி, ஆழ்துளை கிணறுகளை அழித்து, விவசாயிகளை கைது செய்தவர் எப்படி விவசாயி ஆவார்? என்று ஆவசமாக முதலமைச்சர் பழனிசாமியை விமர்சனம் செய்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close