[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா காலமானார்
  • BREAKING-NEWS பிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை கொண்ட Modi-Journey of a Common Man என்ற வெப் சீரிஸ் தொடரை நிறுத்த ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS 4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில்(தனி) தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாட்டின் மானந்தவாடி பகுதியில் இன்று பிரியங்கா காந்தி வதேரா வாக்கு சேகரிப்பு
  • BREAKING-NEWS பொன்னமராவதி சம்பவத்தால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு
  • BREAKING-NEWS புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு
  • BREAKING-NEWS 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக

நாளை தமிழகம் வருகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் 

home-minister-rajnath-singh-will-election-campaign-in-tamil-nadu-tomorrow-to-support-aiadmk-candidates

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிமுக கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாளை தமிழகத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். 

தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 5 தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தலை பாஜக சந்திக்கிறது. ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறயுள்ள சூழலில், தமிழகம் முழுவதும் அதிமுக மற்றும் திமுக கட்சிகளும் அதன் கூட்டணி கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.தமிழகத்திலுள்ள மேலும் பல கூட்டணி கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறன.

Image result for home minister rajnath singh

இந்த நிலையில் தமிழகத்தில் அதிமுக கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். அதற்காக நாளை தமிழகம் வரும் ராஜ்நாத் சிங் பெரம்பலூர் மற்றும் மதுரை தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆ‌தரித்து அவர் பிரச்சாரம் செய்கிறார். 

Related image

மேலும் நாளை பிற்பகல் 3 மணிக்கு பெரம்பலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சிவபதியை ஆதரித்து நடைபெறும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் ராஜ்நாத் சிங் உரையாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து மதுரைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யனை ஆதரித்து ராஜ்நாத் சிங் பரப்புரை செய்யவுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close