[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வாகன ஓட்டு‌நர் உ‌ரிமம் பெறுவதற்கான குறைந்த‌பட்ச கல்வி தகுதியை அடியோடு நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு ‌செய்துள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆந்திர போலீஸாருக்கு இன்று முதல் வார விடுமுறை அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
  • BREAKING-NEWS மக்களவை சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஓம் பிர்லா எம்.பி. போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
  • BREAKING-NEWS தேர்தல் தோல்வியை அடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்கிரஸ் கட்சி

தேர்தல் களத்தில் காணாமல் போன நட்சத்திர பேச்சாளர்கள் !

the-number-of-cinematic-star-speakers-in-the-lok-sabha-elections-has-declined

கடந்த சட்டமன்ற தேர்தலை காட்டிலும், இந்த மக்களவை தேர்தலில் பரப்புரை செய்யும் சினிமா நட்சத்திர பேச்சாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் வளர்ச்சியில் சினிமா நட்சத்திரங்களின் பங்கு மகத்தானது. கட்சிகளின் கொள்கைகளை பாமர மக்கள் அறிய பேச்சாளர் படையையே கட்சிகள் கொண்டிருந்தன என்பது வரலாறு கூறும் கூற்றாகும். அத்தகைய பேச்சாளர்களின் தேர்தல் பரப்புரையும் தேர்தல் காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின என்பதும் தமிழகம் அறிந்த உண்மையே. ஆனால் இந்த மக்களவைத் தேர்தலில் நட்சத்திர பேச்சாளர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது. மக்களின் கவனத்தை ஈர்க்கும் நட்சத்திர பேச்சாளர்கள், கட்சிகளின் கவனத்தை ஏன் ஈர்க்கவில்லை?

Image result for udhayanidhi stalin campaign

பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக விரல் விட்டு எண்ணும் அளவிலேயே நட்சத்திர பேச்சாளர்களை களமிறக்கியுள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் பரப்புரை செய்த ராமராஜன், குண்டு கல்யாணம், சிங்கமுத்து உள்ளிட்ட நட்சத்திர பேச்சாளர்கள் இந்த மக்களவைத் தேர்தல் பரப்புரையில் காணமுடியவில்லை. திமுக சார்பில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் மட்டுமே பரப்புரை களத்தில் பரபரப்பாக பேசி வருகிறார்.

காலமாற்றத்தால் நட்சத்திர பேச்சாளர்களை வைத்து கூட்டம் மட்டுமே கூட்டமுடியும், அதை வாக்குகளாக மாற்ற இயலாது என்பதே நட்சத்திர பேச்சாளர்களின் புறக்கணிப்புக்கு காரணம் என்கிறார் திமுகவை சார்ந்த நடிகர் போஸ் வெங்கட். மேலும் அமமுக ஆதரவாளரான நடிகர் செந்தில், கடந்த காலத்தை காட்டிலும் நட்சத்திர பேச்சாளர்களின் தரம் குறைந்துவிட்டது. இதுவே நட்சத்திர பேச்சாளர்களின் புறக்கணிப்பிற்கு காரணம் என்று கூறிகிறார்.

கொள்கைகள், வாக்குறுதிகள் அடிப்படையிலான பிரசாரங்களை யார் முன்னெடுத்தாலும் மக்கள் மத்தியில் வரவேற்பு பெரும் என்பதே அரசியலை அணுகுவோரின் கருத்தாக உள்ளது. கூட்டம் கூட்ட பயன்பட்ட நட்சத்திர பேச்சாளர்களின் காலம் கடந்துவிட்டது என்பது தான் தற்போதைய அரசியல் கட்சிகளின் நிலையை உணர்த்துகின்றது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close