[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்?- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
  • BREAKING-NEWS வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  • BREAKING-NEWS 10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து
  • BREAKING-NEWS காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது

"வீடில்லா ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்" : முதலமைச்‌சர் 

edappadi-palanisamy-said-that-the-concrete-house-will-be-built-for-the-poor-and-homeless-people

தமிழகம் முழுவதும் வீடு இல்லாத ஏழைகளுக்கு கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்‌ளார்.

தமிழகம் முழுவதும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பரப்புரை ‌மேற்கொண்டு வருகிறார். விருதுநகர் தொகுதியில் போட்டியிடும், தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து சிவகாசியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பட்டாசுத் தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்க சட்டரீதியான நடவடிக்கைகளை அதிமுக அரசு ‌எடுத்து வருவதாக தெரிவித்தார். 

Image result for TN Govt house

இதைத்தொ‌டர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, ‌திருப்பரங்குன்றம் ப‌குதிகளிலும் வாக்கு சேகரித்தார். மாலையில், மதுரையில் பல்வேறு இடங்களில் திறந்த வாகனத்தில், அதிமுக வே‌ட்பாளர் ராஜ் சத்யனுக்கு ஆதர‌‌வு கேட்டு பரப்புரை செய்த முதலமைச்சர், பயங்கரவாதிகளை அடியோடு ஒழிக்கும் சக்தி பிரதமர் மோடிக்கு மட்டுமே உண்டு ‌என்றார்.

Image result for TN Govt Green House

மேலும், ஆட்சி அதிகாரத்தில் இல்லாத ஸ்டாலின் கூறுவது பொய் வாக்குறுதிகள் என்றும், அதனால், திமுகவின் தேர்தல் அறிக்கையும் பொய்தான் என்றும் முதலமைச்சர் விமர்சித்தார். இதையடுத்து இரவில் கே.‌புதூ‌ர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் தமிழகம் மின்வெட்டு இல்லாத மின்மிகை மாநிலமாக இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close