[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா காலமானார்
  • BREAKING-NEWS பிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை கொண்ட Modi-Journey of a Common Man என்ற வெப் சீரிஸ் தொடரை நிறுத்த ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS 4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில்(தனி) தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாட்டின் மானந்தவாடி பகுதியில் இன்று பிரியங்கா காந்தி வதேரா வாக்கு சேகரிப்பு
  • BREAKING-NEWS பொன்னமராவதி சம்பவத்தால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு
  • BREAKING-NEWS புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு
  • BREAKING-NEWS 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக

அருணாச்சல முதல்வர் வாகனத்திலிருந்து ஒருகோடிக்கு மேல் பணம் பறிமுதல்

arunachal-pradesh-bjp-leaders-claim-1-8-crore-seized-by-ec-as-personal

அருணாச்சல பிரதேசத்தில் தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.8 கோடி பணம் தன்னுடைய சொந்த பணம் என்று பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.

இப்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணைய பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் அருணாச்சல பிரதேசத்தின் பாசிகாட் பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையில் அம்மாநில முதல்வர் பிரேமா கண்டுவின் காரை சோதனை செய்தபோது ரூ1.8 கோடி பணம் சிக்கியது. 

இந்தப் பணத்தில் 1 கோடி ரூபாய் பாஜகவின் மேபோ (Mebo) தொகுதி வேட்பாளரான டங்கி பெர்மியின் மகன் காரிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல மீதமுள்ள 80லட்சம் ரூபாய் பணம் மாநில அரசின் போக்குவரத்துறையின் துணைச் செயலாளரின் காரிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் பாஜகவின் முன்னாள் எம்.எல்.ஏ ராலோம் போராங் சொந்தமானது எனத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் போராங் தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில், “இந்தப் பணத்தில் பாதி என்னுடைய சொந்தக்காரரிடம் இருந்து கடனாக பெறப்பட்டது. மீதியுள்ள பணத்தில் நான் மாரியங் பகுதியில் நிலம் வாங்க திட்டமிட்டிருந்தேன்”எனத் தெரிவித்துள்ளார். அதேபோல டங்கி பெர்மியின் மகனும் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “இந்த 1கோடி ரூபாய் பணம் நான் வைர நகைகள் விற்றதன் மூலம் கிடைத்தது. தற்போது நான் கட்டிடம் கட்டிவருவதால் இந்தத் தொகையை என் கையில் வைத்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டவுடன் காங்கிரஸ் கட்சியினர் அம்மாநில முதல்வர் பிரேமா கண்டு மற்றும் பிரதமர் மோடி ஆகியவர்கள் மீது தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். ஏனென்றால் இந்தப் பணப் பறிமுதல் பிரதமர் மோடி அருணாச்சல பிரதேசத்திற்கு வருவதற்கு முந்தைய நாள் நடைபெற்றது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close