[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

காங்கிரஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட 6 பிரசார வீடியோக்களை வெளியிட தேர்தல் ஆணையம் தடை

election-commission-denies-clearance-to-six-congress-advertisements

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட 6 பிரசார வீடியோக்களை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் இந்தியா முழுவதும் தேர்தல் வேலைகள் பரபரப்பாக போய்க்கொண்டு இருக்கின்றன. அனைத்து கட்சிகளும் ஓய்வின்றி வாக்கு சேகரித்து வருகின்றன. நேரடியாக சென்று மக்களிடத்தில் செய்யும் பிரசாரம் ஒருபுறம் இருக்க சமூக வலைதளங்கள் மூலமும் பிரசாரங்கள் களைகட்டியுள்ளன. எனவே தேர்தல் நடைமுறைகளை மீறாமல் இருக்க தேர்தல் ஆணையம் அனைத்து தளங்களையும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட 6 பிரசார வீடியோக்களை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அந்த வீடியோவில் ரபேல் விமான ஊழல் தொடர்பான வீடியோவும் அடங்கும்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய பிரதேச காங்கிரஸ் பிரமுகர் ஷோபா ஒசா, ''எங்களுடைய 6 பிரசார வீடியோக்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அந்த வீடியோக்களில் சர்ச்சைக்கு வழி இல்லை. மத்திய அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக தேர்தல் ஆணையம் இவ்வாறு நடந்துகொண்டுள்ளது'' என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த விவகாரத்துக்கு விளக்கம் கொடுத்துள்ள தேர்தல் ஆணையம், ''காங்கிரசின் பிரசார வீடியோ ஒன்றில், மூவண்ணக்கொடியின் வண்ணத்தை ஊசி வழியாக திரவமாக ஏற்றுவது போல உள்ளது. ரபேல் தொடர்பாக வழக்கு நடைபெற்று வரும் வேளையில் அது தொடர்பாகவும் வீடியோ உள்ளது’’ என்று தெரிவித்துள்ளது.

இந்த வீடியோக்கள் ஒரு அரசியல் நையாண்டி மாதிரியானவை மட்டுமே எனக்கூறி, தனது நிலைப்பாட்டை தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றும் காங்கிரஸ் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close