[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது
  • BREAKING-NEWS அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல்; வீடுகள் வாகனங்கள் நொறுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் குவிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மதுரை மக்களவை தொகுதியை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் பழுதான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற வேண்டும்; வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கவும் கோரிக்கை - தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்
  • BREAKING-NEWS பெரம்பலூர் தொகுதியில் உள்ள வெங்கலம் அரசு தொடக்க பள்ளி வாக்குச் சாவடியில் அதிமுகவினர் குடிபோதையில் ரகளை என புகார்
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி வெறும் 4.86% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன

பாஜக கோட்டையான மத்திய பிரதேசம் காங்கிரஸ் ‘கை’க்கு மாறுமா? 

congress-hopes-to-build-on-assembly-victory-in-madhya-pradesh

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மத்திய பிரதேசத்தில் அதிக வெற்றிகளை ஈட்டும் என்ற நம்பிகையில் உள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக பெரும் அளவில் முத்திரை பதித்துள்ளது. குறிப்பாக விதிஷா தொகுதியில் பாஜக 1967ஆம் ஆண்டு முதல் மாபெரும் வெற்றியை பெற்றுவருகிறது. இந்தத் தொகுதியில் 1991ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் போட்டியிட்டு வெற்றிப் பெற்றிருந்தார். அத்துடன் கடந்த 10 ஆண்டுகளாக இதே தொகுதியில் வெற்றிப் பெற்று சுஷ்மா சுவராஜ் எம்.பியாக உள்ளார். 

ஆனால் காங்கிரஸ் கட்சி கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற மத்திய பிரதேச சட்டப் பேரவை தேர்தலில் சிறப்பாக செயல்பட்டு ஆட்சியமைத்தது. இந்தத் தேர்தலில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களையும் பாஜக 109 இடங்களையும் கைப்பற்றின. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி குவாலியர்-சாம்பல் பகுதிகளில் இருந்த 34 இடங்களில் 26ல் வெற்றிப் பெற்றது. 

மேலும் 2018 தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வாக்குச் சதவிகிதமும் அதிகரித்தது. அதாவது காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்திருந்தாலும் அக்கட்சி பெற்ற வாக்குச் சதவிகிதம் பாஜகவை விட 0.13% குறைந்து இருந்தது. எனினும் இது காங்கிரஸ் கட்சி பெற்ற சிறந்த வாக்குச் சதவிகிதமாகும். ஏனென்றால் முன்பிருந்த இரு கட்சிகளுக்கும் இடையிலான  இருந்த வாக்குச் சதவித வேறுபாடு தற்போது குறைந்ததுள்ளதே காரணம்.

இதே நிலை மத்திய பிரதேசத்தில் தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடர்ந்தால் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்ற 35.35% வாக்குகளிலிருந்து அதிக வாக்குகள் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் 1993ஆம் ஆண்டு முதல் கடந்த 2018 வரை நடைபெற்றுள்ள மொத்தம் 12 தேர்தல்களில் இரண்டுமுறை (1993,1998) மட்டும் காங்கிரஸ் கட்சி பாஜகவைவிட அதிக வாக்கு சதவிகிதங்களை பெற்றுள்ளது. 

எனவே இம்முறை மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 29 இடங்களில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்று தீவிரமாக காங்கிரஸ் கட்சி முயன்று வருகிறது. இதற்காக விவசாயக் கடன் ரத்து மற்றும் சமூக வளர்ச்சி திட்டங்கள் ஆகியவற்றை காங்கிரஸ் அரசு செயல்முறைபடுத்தி வருகிறது.

அத்துடன் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டை காங்கிரஸ் கட்சி 45% அதிகரித்தது. எனினும் இதற்கு மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியில் செயல்முறைப்படுத்தப்பட்டுள்ள நல திட்டங்கள் மூலம் மத்திய பிரதேசத்தில் பாஜகவின் கோட்டையை தகர்க்க நம்பிக்கையுடன் காத்திருக்கிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close