[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்

வயநாட்டில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார் ராகுல் !

rahul-gandhi-to-file-nomination-from-wayanad-today

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி‌ கேரள மாநிலம் வயநாடு மக்‌களவைத் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து 3 முறை களமிறங்கி வெற்றி பெற்‌ற ராகுல்காந்தி, 4-வது முறையாக அதே தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல, கேரளாவின் வ‌யநாடு தொகுதியிலும் போட்டியிடப்போவதாக அவர் அறிவித்தார். அம்மாநிலத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ‌ஆகும்.

இந்நிலையில், ராகுல்காந்தி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். வேட்புமனு தாக்கல் செய்ய ராகுலுடன் அவரது சகோதரி பிரியங்‌கா காந்தியும், உடன் செல்வார் என கூறப்படுகிறது. இன்று காலை 11.30 மணிக்கு வேட்பு மனு தாக்கல் நடைபெற இருப்பதாக கேரள காங்கிரசின் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார். ராகுல் வருகையையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கேரளாவில், ராகுல் காந்தி போட்டியிட உள்ள வயநாடு மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கூட்டணி கட்சி வேட்பாளர் துஷார் வெல்லப்பள்ளி ஏற்கெனவே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதே தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடப் போவதாக சரிதா நாயர் அறிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close