[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்

புத்தக பறிமுதல் பற்றி அறிக்கை கேட்கும் தலைமை தேர்தல் ஆணையம்

election-commission-asks-report-on-book-seized-case

‘நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்’ என்ற புத்தகம் பறிமுதல் தொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரி அறிக்கை தாக்கல் செய்யுமாறு தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

எழுத்தாளரும், மொழி பெயர்ப்பாளருமான எஸ்.விஜயன் எழுதியுள்ள "நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்" எனும் புத்தகத்தை பாரதி புத்தகாலயம் இன்று வெளியிட இருந்தது. முன்னதாக புத்தகத்தை வெளியிடுவது தேர்தல் நடத்தை விதிமீறல் என்றும், அதனால் புத்தகத்தை வெளியிடக்கூடாது எனவும் தேர்தல்‌ ஆணையம் கடிதம் அளித்திருந்தது.

இதனையடுத்து தேனாம்பேட்டையில் அமைந்துள்ள பாரதி புத்தகாலயத்தில் ஆய்வு மேற்கொண்ட தேர்தல் பறக்கும் படை‌ அதிகாரிகள் "நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்" என்ற புத்தகத்தின்‌ 146 பிரதிகளை பறிமுதல் செய்தனர். மேலும் இன்று மாலை புத்தகம் வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்தக் கூடாது எனவும் கடிதம் அளித்துள்ளனர். இது குறித்து தேனாம்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புத்தகத்தில் கட்சி சின்னங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்றும், இது தேர்தல் விதிமுறை இல்லை எனவும் பாரதி புத்தகாலயம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிட உள்ளதாகவும், தேவைப்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்றும் பாரதி புத்தகாலய பதிப்பாளர் தெரி‌வித்திருந்தார்.

இந்நிலையில் ‘நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்’ என்ற புத்தகம் பறிமுதல் தொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரி அறிக்கை தாக்கல் செய்யுமாறு தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close