[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்

நீட் தேர்வு ரத்து, விவசாயத்திற்கு தனி பட்ஜெட்- காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு

congress-election-manifesto-released

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில் மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரான ராகுல்காந்தி வெளியிட்டார். அதில் இடம்பெற்றுள்ள சில சிறம்பம்சங்கள்:

* ‘நியாய்’ எனப்படும் குறைந்தபட்ச வருவாய் மூலம் ஆண்டுக்கு ரூ.72,000 வழங்கப்படும்
* ‘நியாய்’ திட்டத்தால் நாட்டிலுள்ள 20 சதவீதம் ஏழைக்குடும்பங்கள் பயனடையும்
* பண மதிப்பிழப்பு திட்டத்தின் பாதிப்புகளை சரிசெய்யும் வகையில் ‘நியாய்’ திட்டம் இருக்கும்
* கிராம ஊராட்சிகளில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்
* மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்
* புதிய தொழில்தொடங்க 3 ஆண்டுகளுக்கு எந்த அனுமதியும் பெற தேவையில்லை

* 2030ஆம் ஆண்டிற்குள் நாட்டிலிருந்து வறுமை முற்றிலுமாக ஒழிக்கப்படும்
* பயங்கரவாதத்தை ஒழிக்க முழுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
* விவசாய கடன்களை திரும்பிச் செலுத்தாவிட்டால் அது கிரிமினல் குற்றமாக கருதப்படாது
* விவசாயத்திற்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்
* 100 நாள் வேலைதிட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்
* நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில் அந்த தேர்வு முறை ரத்து செய்யப்படும்

* தற்போது அமலில் உள்ள ஜிஎஸ்டி முறை மாற்றப்படும். வரி விகிதம் ஒரே அளவில் இருக்கும்.
* காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இலங்கை உடனான மீனவர் பிரச்னை முழுமையான தீர்க்கப்படும்
* அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும்
* தென்னிந்திய மக்களுடன் நான் இருக்கிறேன் என்பதை உணர்த்தவே கேரளாவில் போட்டியிடுகிறேன்: ராகுல்காந்தி
* ரஃபேல் போர் விமான முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்
* பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்வரப்படும்

* புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.

* அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க கட்டணம் வசூலிக்கப்படாது

* பொதுப்பட்டியலில் உள்ள சில துறைகள் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும்.

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close