[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

கீரை வியாபாரம், ஷூ பாலிஷ் என நூதன பரப்புரையில் ஈடுபடும் மன்சூர் அலிகான்!

actor-mansoor-alikhan-as-novel-propagation-in-election-campaign-at-dindigul

திண்டுக்கல்லில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான் தெருவோரக் கடையில் அமர்ந்து பொதுமக்களின் ஷூவுக்கு பாலிஷ் செய்து நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.

திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக நடிகர் மன்சூர் அலிகான் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு தற்போது வரை திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். மேலும் திண்டுக்கல் தொகுதி வாக்காளர்களை கவர, நூதன முறைகளை கையாண்டு வருகிறார். சாலையில் குவிந்திருந்த குப்பைகளை அகற்றியும், ஷூ பாலிஷ் செய்தும், மூட்டைகளை சுமந்தும், டீ ஆற்றியும், இளநீர் கடையில் இளநீர் வெட்டி குடுப்பதும், கீரை விற்றும் வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார். 

Image result for Actor Mansoor AliKhan Election Campaign at Dindigul

இந்நிலையில் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட மன்சூர் அலிகான் மாட்டு மந்தையில் மக்களோடு மக்களாக அமர்ந்து, கட்சியின் கொள்கையை பேச்சாளர் மூலம் விளக்கி வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார். அதேபோல் பொதுமக்கள் கொடுக்கும் மோர், குளிர்பானங்கள், தண்ணீர் உள்ளிட்டவற்றை அருந்தி மக்களோடு மக்களாக வாழும் எளிய வேட்பாளர் என தன்னை அறிமுகப்படுத்தி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

Image result for Actor Mansoor AliKhan Election Campaign at Dindigul

 மேலும், வாக்களிப்பதன் அவசியத்தையும் அங்கிருந்த மக்களிடம் தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் வலியுறுத்தினார். அப்போது அங்கு கூடியிருந்த மக்களிடம்  நகைச்சுவையாக பேசி சிரிக்கவும் வைத்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close