[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக திமுக அறிவித்துள்ள போராட்டம் ஒரு கபட நாடகம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS ஜூன் 24ம் தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத்தில் இருந்து 53 உறுப்பினர்களை நீக்கிய நடைமுறை சரியே - சென்னை உயர்நீதிமன்றம்

“என்னது? ‘ஒளிமயமான எதிர்காலம்’ எம்.ஜி.ஆர் பாடலா?” -மாற்றி பேசிய பிரேமலதா

premalatha-vijayakanth-wrong-statement-in-election-campaign

நடிகர் சிவாஜி நடித்த‘பச்சை விளக்கு’திரைப்படத்தில் வெளியான ‘ஒளிமயமான எதிர்காலம்’ பாடலை, எம்ஜிஆர் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் என திருச்சியில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா தவறான தகவலை அளித்துள்ளார்.

திருச்சியில் தேமுதிக வேட்பாளரை அறிமுகப்படுத்திவிட்டு பேசிய பிரேமலதா, “விஜயகாந்திற்கு மருத்துவர்கள் பேச்சு பயிற்சி அளித்து வருகின்றார்கள். அவர் எப்போது எம்.ஜி.ஆரின் ‘ஒளிமயமான எதிர்காலம்’ பாடலைத்தான் விரும்பிப் பாடுவார்” என்று தெரிவித்தார்.

மேலும், எம்ஜிஆர் மீது அதிக அன்பு வைத்திருப்பதாலேயே அவரது பாடலை விஜயகாந்த் பாடியதாக கூறினார். பிரேமலதாவின் இந்தச் பேச்சைக் கேட்டு அங்கிருந்த அதிமுகவினரும் உற்சாகமாக கரவொலி எழுப்பினர். அதேசமயம் ‘ஒளிமயமான எதிர்காலம்’ என்ற பாடல் நடிகர் சிவாஜி நடிப்பில் வெளியான ‘பச்சை விளக்கு’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலாகும். இந்தப் பாடலை டி.எம்.எஸ் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close