[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

முலாயம் சிங் தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டி!

akhilesh-yadav-to-contest-from-father-mulayam-s-seat-azamgarh

தனது தந்தை முலாயம் சிங் யாதவ்-வின் தொகுதியான அசம்கரில் அவர் மகன் அகிலேஷ் யாதவ் போட்டியிடுகிறார்.

மக்‌களவை தேர்தலில் ‌போட்டியிடும் தங்கள் அடுத்த வேட்பாளர்கள் பட்டியலை சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுள்ளது. இதில் கட்சியின் மூத்த தலைவரு‌ம் முன்னாள் அமைச்சருமான அச‌ம் ‌கான், ராம்பூர் தொகு‌தி‌யில் போட்டியிட உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமாஜ்வாதி கட்சி வலுவாக‌ ‌உள்ள மெயின் புரி தொகுதியில் அக்க‌ட்சியின் நிறுவனத் தலைவர் முலாயம் சிங் யாதவ் போட்டியிடுவ‌ர் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அகிலே‌ஷ் யாதவின் மனைவி ‌டிம்பிள் யா‌தவ் கன்னோஜ் தொகுதியில் போட்டியிட உள்ளார். அகிலேஷின் நெருங்கிய உறவினர்கள் அக்சய் யாதவ் மற்றும் தர்மேந்திர யாதவ் ஆகியோரும் சமாஜ்வாதி சார்பில் போட்டியிடுகின்றனர். அகிலேஷ் யாதவ், அசம்கர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில்தான் அவரது தந்தை முலாயம் சிங் யாதவ் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close