[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் கெடு விதித்துள்ளார்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

''சுழற்சி முறையில் பிரதமர் பதவி தேவை'': சீமான்

seeman-asks-to-rotate-pm-post-to-each-state

சுழற்சி முறையில் பிரதமர் பதவியை அனைத்து மாநிலங்களுக்கும் வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். 

மக்களவை மற்றும் சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி நடக்கிறது. இதில் தமிழகத்தின் பிரதான கட்சிகளா ன திமுக, அதிமுக கட்சிகள்  கூட்டணி கூட்டணி கட்சிகளுடன் இணைந்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில் நாம் தமி ழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தனியாக தேர்தலை சந்திக்கின்றன. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி சென்னை மயிலாப்பூரில் நடந்தது. 

அப்போது பேசிய சீமான், சுழற்சி முறையில் பிரதமர் பதவியை அனைத்து மாநிலங்களுக்கும் வழங்க வேண்டும் என்றும் இனி எந்தக் காலத் திலும் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார். தாம் ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவர்களை பாதுகாக் கத் தனியாக நெய்தல் படையை அமைக்கப் போவதாக தெரிவித்தார். கச்சத் தீவை மீட்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப் போவதாகவும் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close