[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா
  • BREAKING-NEWS தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2,081 கோடி வாடகை பாக்கியை வசூல் செய்யாமல் ரூ.250 கோடியாக குறைக்க பேரம் நடப்பதாக தகவல் - ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS டெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் - டெல்லி அரசுக்கு மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்து
  • BREAKING-NEWS உத்தர பிரதேசம்: காற்று மாசு காரணமாக கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் நவ.14, 15ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

தமிழிசைக்கு பதிலாக கனிமொழிக்கு வாக்கு கேட்ட அதிமுக வேட்பாளர்..!

admk-candidate-asks-vote-for-dmk-candidate-kanimozhi

விளாத்திக்குளம் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் சின்னப்பன், திமுக வேட்பாளரான கனிமொழிக்கு வாக்கு கேட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி பேரவை இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட 18 சட்டப்பேரவை தொகுதிகளில் விளாத்திக்குளம் தொகுதியும் ஒன்று. இந்த தொகுதி தூத்துக்குடி மக்களவை தொகுதிக்குள் வருகிறது.

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளராக கனிமொழி அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக கூட்டணியில் தூத்துக்குடி மக்களவை தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில் விளாத்திக்குளம் தொகுதி அதிமுக வேட்பாளரான சின்னப்பன், விளாத்திக்குளம் பேருந்து நிலையம் அருகே தனது பரப்புரையை தொடங்கினார். அப்போது மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்த அவர், தூத்துக்குடி மக்களவை தொகுதியின் வேட்பாளர் கனிமொழிக்கு வாக்கு கேட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் சுதாரித்துக் கொண்ட சின்னப்பன், தமிழிசை சவுந்தரராஜனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close