[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

ரூ.10 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் ! தேர்தல் பறக்கும்படை அதிரடி

rs-10-crore-valuable-gold-seized-near-madurai

மதுரை அருகே உரிய ஆவணங்கள் இல்லாததால் 10 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் முறைகேடுகளை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, சமயநல்லூர் பேருந்து நிலையம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, ஒரு வாகனத்தில் சேலத்திலிருந்து மதுரையில் உள்ள பிரபல நகைக் கடைக்கு 10 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 80 கிலோ தங்க நகைகள் கொண்டுச் சென்றது தெரியவந்தது. ஆனால் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் 20 பெட்டிகளில் இருந்த நகைகளை பறிமுதல் செய்தனர்.

பின்னர் நகைகளை சார்நிலை கருவூலத்தில் தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்த நிலையில் அவை குறித்து வருமான வரித்துறையினர் சோதனையிட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close