தேமுதிக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் போட்டியிடுகிறார்.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியல் மற்றும் பிரசார பணிகளில் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. அன்றே இடைத்தேர்தலும் நடக்கிறது.
திமுக, அதிமுக கட்சிகள் தங்கள் மற்றும் தங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகளை அறிவித்துவிட்டன. வேட்பாளர்கள் அறிவிப்பையும் முடித்துவிட்டன. அந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக நேற்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதிமுக கூட்டணி யில் இடம்பிடித்துள்ள, தேமுதிகவுக்கு வடசென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய நான்கு தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளன. தேமுதிக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா கூறியிருந்தார்.
அதன் படி, வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கள்ளக்குறிச்சியில் தேமுதிக துணைச் செயலாலர் எல்.கே.சுதீஷ், திருச்சியில், அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன், விருதுநகரில் தேமுதிக விசாரணைக் குழு தலைவர் அழகர் சாமி, வட சென்னையில் தேமுதிக கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் போட்டியிடுகின்றனர்.
‘குயின்’ வெப் சீரிஸின் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்கள் இதுதான்..!
சச்சின் தேடிய அந்த நபர் சென்னையை சேர்ந்த இவர்தான்..!
கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் தொடங்கியது
“பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்”- நித்யானந்தா மீது அடுத்த புகார்..!
"தர்பார் வெளியானவுடன் ரஜினியின் அரசியல் தர்பார் அரங்கேறும்"- தமிழருவி மணியன்..!